வாட்மீட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்படுத்தப்படும் மின்திறனை அளவிடப் பயன்படும் கருவி வாட்மீட்டர் ஆகும். அதாவது, மின்சுற்று ஒன்றில் ஓரலகு காலத்தில் பயன்படுத்தப்படும் ஆற்றலை அளவிடக் கூடியது ஆகும். இக்கருவியில், நிலையாகப் பொருத்தப்பட்ட, வரிச் சுருள் போன்ற ஒரு சோடி கம்பிச் சுருள்களுக்கிடையில் அமைக்கப்பட்ட இயங்கு சுருள் உள்ளது. இயங்கு சுருளுடன் குறிமுள் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். குறிமுள்ளின் முனையானது வட்ட அளவுகோலிற்கு முன்பாக இயங்கக் கூடியதாக இருக்கும். கம்பிச் சுருள்களில் மின்னோட்டம் பாயும்போது, குறிமுள்ளின் விலக்கமானது மின் திறனுக்கு நோ்த்தகவில் இருக்கும்.

வாட் மீட்டா்
ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாட் மீட்டா்

உசாத்துணை[தொகு]

  1. US Lawrence Livermore laboratory, Standby Power, measuring standby
  2. Data listed in text from manual for inexpensive plug-in electricity meter Brennenstuhl PM230. The lowest measurable current is given as 0.02 A, which corresponds to about 5 W at 230 VAC
  3. Joeseph J. Carr, RF Components and Circuits, Newnes, 2002 ISBN 978-0-7506-4844-8 pages 351-370
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்மீட்டர்&oldid=3734018" இருந்து மீள்விக்கப்பட்டது