வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல்
வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல் | |
---|---|
Locations of the fifteen sniper attacks in the D.C. area numbered chronologically. | |
இடம் | மேரிலாந்து, வர்சீனியா, வாசிங்டன், டி. சி. அரிசோனா |
நாள் | பிப்ரவரி 16, 2002 – செப்டம்பர் 26, 2002 (ஆரம்ப கால சுடுதல்கள்) அக்டோபர் 2, 2002 – அக்டோபர் 24, 2002 (மறைசுடுவீரர் தாக்குதல்) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | வாசிங்டன்-பால்டிமோர் பெருநகர வட்ட பொதுமக்கள் |
தாக்குதல் வகை | இலக்கற்ற கொலை, கொலைகள் |
ஆயுதம் | Bushmaster XM-15 rifle, .223 Remington/5.56×45mm NATO (preliminary shootings) |
இறப்பு(கள்) | மொத்தம் 17:
|
காயமடைந்தோர் | மொத்தம் 10 :
|
தாக்கியோர் | ஆலன் முகமது, லீ மால்வோ |
வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல் அல்லது வட்டச்சாலை மறைசுடுவீரர் தாக்குதல் என்பது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பால்டிமோர் - வாசிங்டன், டி. சி. பெரு நகர வட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு நிகழ்வாகும். இந்த துப்பாக்கி சூட்டில் பத்து பேர் இறந்தனர் மூவர் கடுமையாக காயமுற்றனர்.
நாற்பத்தோரு வயதான யான் ஆலன் முகமதுவும் பதினேழு வயதான லீ பாய்ட் மால்வோவும் தங்கள் 1990 செவரோலே கப்ரீசு மகிழுந்தில் பயணப்பட்டுக்கொண்டே இத்துப்பாக்கி சூட்டை நடத்தினார்கள். கொலை கொள்ளை ஆகிய குற்றச்செயல்களை பத்து மாநிலங்களில் 2002 பிப்ரவரி முதல் நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டார்கள் ஏழு பேர் காயமுற்றனர். அக்டோபரையும் சேர்த்தால் மொத்தம் பதினேழு கொலை.[1]
2003இல் முகமதுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவர் குற்றவாளியான மால்வோவுக்கு பிணையில் வரமுடியாத ஆறு தொடர்ச்சியான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2009இல் முகமதுக்கு விச ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அலபாமா மாநிலத்திற்கும் மில்லருக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் நடந்த சட்டப்போராட்டத்தின் முடிவாக வந்த தீர்ப்பின் படி சிறார் குற்றவாளிகளை பிணையில் வராத படி ஆயுள் தண்டனை வழங்க முடியாது என்பது அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தை மீறுவது என்றதன் அடிப்படையில் 2017இலில் வர்சீனியா மேல் முறையீட்டு நீதி மன்றம் மால்வோவின் பிணையில்லா மூன்று ஆயுள் தண்டனையை நீக்கியது. இத்தீர்ப்பு மேரிலாந்தில் வழங்கப் பட்ட ஆறு பிணையில் வராத படி ஆயுள் தண்டனைக்கு பொருந்தாது. பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு ஆயள் தண்டனை பெற்றிருந்தால் இருபது ஆண்டுகளுக்கு பின் விடுதலை பெறுவார்கள் என்ற வர்சீனியா சட்டத்தின் அடிப்படையில் பிப்ரவரி 2020 அன்று வர்சீனியா நீதிமன்றம் வழங்கிய தண்டனை முடிவுக்கு வரும்.
ஆரம்ப கால தாக்குதல்கள்
[தொகு]2002 பிப்ரவரி 16 அன்று டக்கோமாவில் 21 வயதுடைய நிக்கோல் என்பவர் அவரின் அத்தை வீட்டு முன்வாசலில் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவரின் அத்தையும் முகமதின் முன்னாள் மனைவி மைல்டுரெட்டும் நல்ல நண்பர்கள். இவர் முகமதுடனான திருமணத்தை முறித்துக்கொள்ளுமாறு மைல்டுரெட்டை ஊக்கப்படுத்தினார்.[2]
2002 மார்ச் 19 அன்று அரிசோனா மாநில துசான் நகரத்தில் 60 வயதுடைய டெய்லர் என்பவரை குழிபந்தாட்ட திடலில் பயிற்சிசெய்து கொண்டிருந்த போது நெஞ்சில் சுட்டுக்கொல்லப்பட்டார். [3][4] குழிபந்தாட்ட திடலுக்கு அருகில் முகமதின் சகோதரி வசித்தார். சுடப்பட்ட அன்று முகமது அவர் சகோதரி வீட்டுக்குச் சென்றார்.[5]
2002 ஆகத்து 1 அன்று லூசியானா மாநில ஆமன்டு நகரில் வண்டி நிறுத்துமிடத்தில் கார் சக்கரத்தை மாற்றிக்கொண்டிருந்த 51 வயதுடைய கயிட்டா என்பவர் கழுத்தில் சுடப்பட்டார். அவரின் பணப்பையை மால்வோ திருடிச்சென்ற போது செத்ததுபோல் நடித்த அவர் பின் சக்கரம் விற்கும் கடையின் சேவை மையத்தின் உள் சென்றதும் தன் கழுத்தில் குருதி வடிவதை கண்டார்.[6] உடனடியாக மருத்துவமனையை அடைந்த அவர் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குப் போக அனுமதிக்கப்பட்டார். 2010 மார்ச் 1 அன்று மால்வோ எழுதிய மன்னிப்பு கடிதத்தை பெற்றார்.[7]
2002 செப்டம்பர் 5 அன்று 55 வயதுடைய பால் மேரிலாந்தின் கிளிண்டன் நகரில் தன் இத்தாலிய உனவகத்தை பூட்டும்போது ஆறு முறை சுடப்பட்டார். உயிர் தப்பிய அவரின் மடிக்கணினி முகமதுவும் மால்வோவும் கைது செய்யப்பட்டபோது அவர்களின் காரில் இருந்தது.[8]
2002 செப்டம்பர் 21 அன்று யாமத்தில் அட்லாண்டா நகரில் தன் முதலாளி கடையை பூட்டும் நேரத்தில் அவருக்கு உதவிக் கொண்டிருந்த 41 வயதுடைய வோல்டர்ம்மெரியம் நெற்றிநல் சுட்டுக்கொல்லப்பட்டார். .[9]
அன்றே பதினொன்று மணி நேரம் கழித்து அலபாமாவின் மாங்கமேரி நகரின் சாராய கடையில் பணியாற்றிய கடை கணக்கர் 52 வயதுடைய பார்க்கர் கொள்ளையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.[10] பார்க்கருடன் பணியாற்றிய இன்னொரு கடை ஊழியர் ஆடம்சு கழுத்து காயத்துடன் தப்பித்தார்.[11]
2002 செப்டம்பர் 233 மாலை 45 வயதுடைய ஆங் இம் லூசியானாவின் பாட்டன் ரோக்கில் சுட்டுக்கொல்லப்பட்டார்.[12][13]
மேரிலாந்தில் துப்பாக்கிச்சூடு
[தொகு]முகமதும் மால்வோவும் வைத்திருந்த ஊதா நிற 1990ஆம் ஆண்டு வாங்கப்பட்ட செவ்ரோலே காப்ரிசின் காரின் பின் பகுதியில் சிறிய துளை போடப்பட்டிருந்தது, இத்துளை இத்தாக்குதலின் போது துப்பாக்கிக்கு சுடும் வாயிலாக பயன்பட்டது. இது அவர்கள் சுட்டு விட்டு அடுத்தவர் அறியாவண்ணம் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து எளிதாக தப்பிச்செல்ல உதவியது. ஆசுபன் இல்லில் (Aspen Hill) இருந்த மைக்கேல் கைவினைப்பொருட்கள் கடையின் காலதர் (window) வழியாக முதல் துப்பாக்கிச்சூடு மாலை 5.20இக்கு நடந்தது. இத்தாக்குதலில் அக்கடையின் காசாளர் ஆன் சாப்மான் மயிரிழையில் தப்பினார். இத்தாக்குதலில் யாரும் காயமடையாததால் இது யாரையும் குறி வைக்காமல் ஒழுங்கற்று நடந்த தாக்குதல் எனக் கருதப்படுகிறது. இத்தாக்குதல் காவல்துறையை எச்சரிக்கை நிலைக்கு கொண்டு செல்லவில்லை. எனினும் ஒரு மணி நேரம் கழித்து மாலை ஆறு முப்பதுக்கு 55 வயதுடைய கணினி பொறியாளர் மார்ட்டின் வீட்டனின் ரால்ப் சாலையிலுள்ள சாப்பர்சு மளிகை கடையின் கிடங்கின் வண்டி நிறுத்துமிடத்தில் சுட்டு கொல்லப்பட்டார்.
அக்டோபர் மூன்றாம் தேதி காலை ஆசுபன் இல்லிலும் அதற்கு அண்மையிலும் நான்கு பேர் இரண்டு மணி நேரத்திற்குள் சுடப்பட்டு இறந்தனர். வாசிங்டன் டிசி வட்டாரத்தை சேர்ந்த டொக்கோமாவிலும் ஒருவர் அன்று மாலை சுடப்பட்டு இறந்தார்.
வர்சீனியாவில் துப்பாக்கிச்சூடு
[தொகு]அக்டோபர் 4 அன்று இசுபோர்ட்சில்வேனியா கவுண்டியின் இசுபோர்ட்சில்வேனியா மாலின் வண்டி நிறுத்துமிடத்தில் 43 வயதான கரோலின் சிவெல் என்பவர் வாங்கிய பொருட்களை வண்டியில் ஏற்றும்போது 2.30 மணியளவில் மார்பில் சுடப்பட்டு காயமடைந்தார். இச்சமயத்தில் இத்தாக்குதல்களை பற்றி நிறைய செய்தியாளர்கள் விரிவாக செய்தி இட்டுக்கொண்டிருந்ததால் பள்ளி அலுவலர்கள் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய பல நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றனர்.
அக்டோபர் 7 அன்று மேரிலாந்தின் பிரின்சு வில்லியம் கவுண்டியிலுள்ள போவி நகரிலுள்ள பெஞ்சமின் டாசுக்கர் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது காலையில் 13 வயதான இரான் பிரௌன் என்னும் மாணவர் மார்பில் சுடப்பட்டு காயமடைந்தார்.[14] (மாணவர் பெயர் முதலில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை). செவிலியராக பணியாற்றிய இவரின் அத்தை டான்யா பிரௌன் [15] இவரை பள்ளிக்கு அழைத்து வந்ததால் சுடப்பட்டதும் உடனடியாக மருத்துவமனையின் அவசரசிகிட்சைப் பிரிவில் சேர்த்தார். துப்பாக்கி சூட்டினால் மார்பில் காயமடைந்தாலும் இவரின் உள் உறுப்புகள் பாதிக்கப்படவில்லை. காயத்துடன் தப்பிப்பிழைத்த இவர் பின் முகமதுவுக்கு எதிராக சாட்சி அளித்தார்.[16] குற்றம் நடந்த இடத்தில் காவலர்கள் காலி துப்பாக்கி ரவையையும் டாரட் அட்டையும் கைப்பற்றினார்கள். டாரட் அட்டையில் எ"ன்னை கடவுள் என்று அழை" என்று முன் பக்கத்திலும் தனித்தனியான மூன்று வரிகளில் "காவல்துறையே உனக்கு" "துப்பு-என்னை கடவுள் என்று அழை" "இதை செய்தியாளர்களுக்கு சொல்லாதே" என்று பின் பக்கத்திலும் எழுதியிருந்தது.[14][17] டாரட் அட்டையில் எழுதியிருந்ததை செய்தியாளர்களுக்கு வெளியிடாமல் இருக்க காவல்துறை முயன்ற போதும் ஒர் நாள் கழித்து அச்செய்தி டபள்யூயூஎசுக தொக்காவிலும் (தொலைக்காட்சி) வாசிங்டன் போசுட் நாளேட்டிலும் வந்தது.[18]
அக்டோபர் 9 அன்று பிரின்சு வில்லியம் கவுண்டியிலுள்ள மனாசசு அருகேயுள்ள சொனாக்கோ எரிபொருள் நிரப்பும் தளத்தில் இரவு நேரத்தில் எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த 53 வயதுடைய பொறியாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அக்டோபர் 11 காலை இசுபோர்ட்சில்வேனியா கவுண்டியில் பிரெட்டிக்பெர்க் அருகே எக்சான் எரிபொருள் நிரப்பும் தளத்தில் எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த 53 வயதுடைய வணிகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.[14][19]
அக்டோபர் 14 இரவு பால்சு சர்சிலுள்ள செவன் கார்னர் வணிக மையத்திற்கு அருகிலுள்ள ஓம் டிப்போ வண்டி நிறுத்துமிடத்தில் ஆர்லிங்டன் கவுண்டியைச் சேர்ந்த புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தில் புலனாய்வு பகுப்பாய்வாளராக பணியாற்றும் லின்டா சுட்டுக்கொல்லப்பட்டார்.[14]
இதில் காவல்துறைக்கு சிறந்த துப்பு கிடைத்தாக நம்பப்பட்டது ஆனால் துப்பு கொடுத்தவர் அச்சமயத்தில் ஓம் டிப்போவுக்கு உள்ளே இருந்துகொண்டு நேரில் பார்த்தது போல் பொய் துப்பு கொடுத்துள்ளார் என பின்னர் அறிந்தார்கள். பின்பு அவர் குற்ற விசாரணையில் தலையிட்டதாக தண்டிக்கப்பட்டார்.[20]
எரிபொருள் நிரப்பும் இடத்தில் கிட்டதட்ட 25%இக்கும் பேர் சுடப்பட்டு இறந்ததால் எரிபொருள் நிரப்பும் கடைக்காரர்கள் வாடிக்கையாளரை மறைக்கும் நடவடிக்கைக்களை மேற்கொண்டார்கள். பதினாழாம் தேதிக்கு பின் ஐந்து நாட்களுக்கு எந்த துப்பாக்கிச்சூடும் நடக்கவில்லை.
அக்டோபர் 19 இருவு வாசிங்டனிலிருந்து தெற்கே 90 மைல் தொலைவிலுள்ள ஆசுலாந்தில் பான்டர்ரோசா உணவகத்துக்கு அருகிலுள்ள வண்டி நிறுத்துமிடத்தில் 37 வயதான ஊப்பர் சுடப்பட்டார். அவர் மனைவி அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார் அதில் ஒருவர் அவசர ஊர்தியை அழைத்ததால் காயங்களுடன் ஊப்பர் உயிர் தப்பினார். சுடப்பட்ட இடத்திற்கு அருகே 10 மில்லியன் தரும்படியும் இல்லையெனில் அவர் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று எழுதிய 4 பக்க கடிதம் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
அக்டோபர் 21 அன்று எரிபொருள் நிரம்பும் இடத்திற்கு அருகே வெள்ளை வேனில் இருந்த இருவரை ரிச்மாண்டு காவல்துறை கைது செய்தது. பின்பு அவர்கள் சட்டப்படி வராத குடியேறிகள் எனவும் அவர்களுக்கும் துப்பாக்கி சூட்டுக்கும் தொடர்பில்லை என அறியப்பட்டது. பின்பு அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.
அக்டோபர் 22 அன்று காலை மேரிலாந்திலுள்ள ஆசுபன் இல்லில் பேருத்து நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் கோன்ராட் சுடப்பட்டு பின் காயங்களால் உயிரிழந்தார்.[14] மாங்குமேரி கவுண்டி காவல் தலைவர் (செரிப்) மூசு அவர்கள் மறைசுடுவீரர் எழுதிய "உன் குழந்தைகளுக்கு எப்போதும் எங்கேயும் ஆபத்து உண்டு" என்று எழுதிய கடிதத்தை வெளியிட்டார்.
அக்டோபர் 23 அன்று தடவியியல் நிபுணர்கள் கோன்ராட் மறைசுடு வீரரால் உயிரிழந்த பத்தாவது ஆள் என்பதை உறுதி செய்தனர். டக்கோமா பகுதியில் தேடிய போது துப்பாக்கி சூட்டு பயிற்சிக்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் மரக்கட்டையை கண்டெடுத்தனர்.
கைது
[தொகு]அக்டோபர் 24 அன்று வைகறையில் மேரிலாந்து மையர்சுவில்லில் பயணிகளுக்கான ஓய்வு விடுதியில் பல மணி நேரம் அங்கு கார் நிறுத்தப்பட்டிருந்ததால் அங்கு பணியாற்றும் விட்நெ காவல்துறைக்கு தகவல் அளித்ததால் அந்த காரினுள் தூங்கிக்கொண்டிருந்த முகமதுவும் மால்வோவும் கைது செய்யப்பட்டார்கள்.
பின்னணி
[தொகு]முகமது தனது குழந்தைகளை தன்னிடமிருந்து மைல்ட்ரெட் தான் விலக்கி வைத்துள்ளார் என கருதி தனது இரண்டாவது முன்னாள் மனைவி மைல்ட்ரெட்டை கொலை செய்யதிட்டமிட்டார். கொலை பலி தன் மேல் வராமல் இருக்க இந்த தொடர் கொலைகளை நடத்தினார். சீரற்ற தொடர் கொலையில் அவர் சுடப்பட்டு இறந்தால் தன் மேல் ஐயம் எழாது என்பது அவர் எண்ணம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sniper reportedly details 4 new shootings". kxmb.com. AP. June 16, 2006. Archived from the original on October 13, 2007.
- ↑ "D.C. Sniper's first 'intended victim' speaks out". Archived from the original on 2018-02-16. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
- ↑ Manning, Stephen (26 October 2006). "Tucson police question DC sniper about golf course murder". Tucson Citizen இம் மூலத்தில் இருந்து 11 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141011132359/http://tucsoncitizen.com/morgue/2006/10/26/30626-tucson-police-question-dc-sniper-about-golf-course-murder/. பார்த்த நாள்: 19 June 2015.
- ↑ Richards, Chris (28 October 2006). "Police say Malvo confessed to killing Arizona golfer". USA Today (Tucson, AZ) இம் மூலத்தில் இருந்து 12 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161012071616/http://usatoday30.usatoday.com/news/nation/2006-10-27-snipers_x.htm. பார்த்த நாள்: 5 November 2017.
- ↑ "DC sniper Malvo admitted to killing Tucson man". Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
- ↑ Finch, Chris (February 24, 2010). "Hammond shooting connected to D.C. sniper". WVUE இம் மூலத்தில் இருந்து August 31, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100831134316/http://www.cnn.com/2010/CRIME/03/04/malvo.sniper.confession/index.html. பார்த்த நாள்: December 5, 2010.
- ↑ McLaughlin, Elliott C. (2010-03-04). "Sniper's apology brings closure, no justice". CNN.com இம் மூலத்தில் இருந்து September 18, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130918141850/http://www.cnn.com/2010/CRIME/03/04/malvo.sniper.confession/index.html?hpt=T1. பார்த்த நாள்: July 11, 2013.
- ↑ Dao, James (2003-10-22). "Polite but Dogged, Sniper Suspect Offers Defense - The New York Times". Nytimes.com இம் மூலத்தில் இருந்து 2009-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090424202027/http://www.nytimes.com/2003/10/22/us/polite-but-dogged-sniper-suspect-offers-defense.html?partner=rssnyt&emc=rss. பார்த்த நாள்: 2009-08-16.
- ↑ Kovaleski, Serge F.; Ruane, Michael E. (15 December 2002). "Before Area Sniper Attacks, Another Deadly Bullet Trail". The Washington Post இம் மூலத்தில் இருந்து 6 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106071144/http://research.lifeboat.com/sniper.htm.
- ↑ Klass, Kym (10 November 2009). "'Justice' served: Parker's family to watch D.C. sniper's execution". Gannett இம் மூலத்தில் இருந்து 13 November 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20091113001315/http://www.montgomeryadvertiser.com/article/20091110/NEWS01/911100329. பார்த்த நாள்: 11 July 2013.
- ↑ Hickey, Eric W. Encyclopedia of Murder & Violent Crime. 2003, p. 54.
- ↑ Library, C.N.N. (26 September 2016). "DC Area Sniper Fast Facts - CNN.com". CNN இம் மூலத்தில் இருந்து 18 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170118050949/http://www.cnn.com/2013/11/04/us/dc-area-sniper-fast-facts/. பார்த்த நாள்: 17 January 2017.
- ↑ "Husband of La. Victim Knew It Was Sniper". Fox News. Associated Press. 31 October 2002 இம் மூலத்தில் இருந்து 11 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170211204943/http://www.foxnews.com/story/2002/10/31/husband-la-victim-knew-it-was-sniper.html. பார்த்த நாள்: 17 January 2017.
- ↑ 14.0 14.1 14.2 14.3 14.4 Douglas, John; Burgess, Ann W.; Burgess, Allen G.; Ressler, Robert K. (28 ஆகத்து 2006). Crime Classification Manual: A Standard System for Investigating and Classifying Violent Crimes. John Wiley & Sons. pp. 455–457. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7879-8642-1. Archived from the original on 20 மார்ச்சு 2017. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்பிரவரி 2016.
- ↑ "Teen Sniper Victim Testifies". Cbsnews.com. October 30, 2003. Archived from the original on November 16, 2015. பார்க்கப்பட்ட நாள் June 8, 2019.
- ↑ "Youngest sniper victim testifies, BBC News". bbc.co.uk. 2003-10-22 இம் மூலத்தில் இருந்து 14 November 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091114093928/http://news.bbc.co.uk/2/hi/americas/3225817.stm. பார்த்த நாள்: 2009-11-10.
- ↑ Horwitz, sari, & Michael E. Ruane., Sniper: Inside the Hunt for the Killers Who Terrorized the Nation., Random House, 2003, pg.119
- ↑ Dishneau, David. "Woman Questioned in Md. Sniper Hunt". AP NEWS. Archived from the original on 2019-01-12. பார்க்கப்பட்ட நாள் 2019-01-12.
- ↑ CORKY SIEMASZKO (October 29, 2002). "2 SNIPER SUSPECTS CHARGED IN VIRGINIA". New York Daily News இம் மூலத்தில் இருந்து மார்ச் 7, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160307194137/http://www.nydailynews.com/archives/news/2-sniper-suspects-charged-virginia-article-1.498208.
- ↑ Jackman, Tom (January 18, 2007). "2002 Sniper 'Witness' Convicted of Rape, Murder". Washingtonpost.com. Archived from the original on September 14, 2019. பார்க்கப்பட்ட நாள் June 4, 2019.