வாசிங்டன் கடற்படைத் தள துப்பாக்கிச் சூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாசிங்டன் கடற்படைத் தளம்

வாசிங்டன் கடற்படைத் தள துப்பாக்கிச் சூடு நிகழ்வு செப்டம்பர் 16 , 2013 ஆம் ஆண்டு காலை 08:15 மணியளவில் வாசிங்டன் கடற்படைத் தளத்தில் நடந்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். அதில் மர்ம நபர் ஒருவரும் அடக்கம்.மேலும் 14 பேர் காயமடைந்தனர்..[1][2]

இறந்தவர் விவரம்[தொகு]

பெயர் வயது
மைக்கேல் அர்னால்ட் 59
சில்வியா ஃப்ரைசர் 53
கேத்தே கார்டி 62
ஜாண் ரோஜர் ஜாண்சன் 73
ஃபிராங் கோலர் 50
கென்னத் பெர்னார்டு ப்ரோக்டர் 46
விஷ்ணு பண்டிட் 61

மர்ம நபர்[தொகு]

மர்ம நபர்கள் ராணுவ உடை அணிந்திருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் ஆரோன் அலெக்ஸிஸ் (மே 9, 1979 – செப்டம்பர் 16, 2013) [3] என்ற மர்ம நபர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் இத்துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். இவர் முன்பொரு முறை 2004 ஆம் ஆண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்நிலவரம்[தொகு]

இப்பகுதியில் அமைந்திருக்கும் 8 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் தற்காலிகமாக போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.[4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Richard Simon, David S. Cloud, Brian Bennett (September 16, 2013). "At least 12 dead in Washington Navy Yard shooting". Los Angeles Times.
  2. Adam Gabbatt (September 16, 2013). "Navy yard shooting: DC police confirm 12 dead including gunman". 'The Guardian.
  3. Das, Arun Kirstian (September 16, 2013). "Who is Aaron Alexis?". My FOX NY.
  4. Starr, Barbara; Shoichet, Catherine E. (September 16, 2013). "'Multiple' deaths in Navy Yard shooting rampage; suspects may be on loose". CNN. http://www.cnn.com/2013/09/16/us/dc-navy-yard-gunshots/index.html?hpt=hp_t1. பார்த்த நாள்: September 16, 2013.