வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை (Vote counting) என்பது ஒரு தேர்தலில் வாக்காளர்கள் செலுத்திய வாக்குகளை எண்ணும் செயல்முறையாகும். இது கைமுறையாகவோ அல்லது இயந்திரங்கள் மூலமாகவோ நடைபெறலாம். அமெரிக்காவில், தேர்தல் அறிக்கைகளை தொகுத்தல் மற்றும் உத்தியோகபூர்வ முடிவுகளுக்கு அடிப்படையாக இருக்கும் முடிவுகளை சரிபார்ப்பது கேன்வாசிங் என்று அழைக்கப்படுகிறது.[1]
கைமுறை எண்ணிக்கை
[தொகு]வாக்குச் சீட்டு முறையில் நடைபெறும் தேர்தல்களைக் கைமுறை எண்ணிக்கையால் கணக்கிடப்படுகின்றன. வாக்குப்பெட்டிகள் மற்றும்/அல்லது உறைகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, பின்னர் முடிவுகள் கணக்கிடப்படுகின்றன.[2] தானியங்கு எண்ணிக்கை பயன்படுத்தப்பட்ட சமயங்களில் தேர்தல் தணிக்கைக்காகவும் மறு எண்ணிக்கைக்காகவும் கைமுறை எண்னிக்கை பயன்படுத்தப்படுகிறது.[3]
இயந்திரக் கணக்கீடு
[தொகு]வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வாக்காளர்களை பொத்தானை அழுத்துவதன் மூலம் தேர்வு செய்கிறார்கள்.[4] வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள முடிவுகள் எனும் பொத்தானை அழுத்துவதன் மூலம் அந்த வாக்குச்சாவடியில் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளைக் கணக்கிட முடியும்.
இம்முறையில் தனி நபர்கள் வாரியாக வாக்கு எண்ணிக்கை செய்ய இயலாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chapter 13: Canvassing and Certifying an Election". Election Management Guidelines (PDF). U.S. Election Assistance Commission.
- ↑ History of Voting Technology பரணிடப்பட்டது 2013-11-01 at the வந்தவழி இயந்திரம் from PBS's The NewsHour with Jim Lehrer
- ↑ "Post-Election Tabulation Audit Pilot Program Report" (PDF). Maryland State Board of Elections. October 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-02-14.
- ↑ "Vote: The Machinery of Democracy". Smithsonian Institution. 16 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.