வாகன் பொது நூலகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாகன் பொது நூலகங்கள் (Vaughan Public Libraries) என்பது கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள வாகன் நகரத்து ஏழு நூலகங்களின் கூட்டு நூலக அமைப்பாகும். இதில் 5,34000 எண்ணிக்கையளவில் நூல்களும் குறுந்தட்டுகளும் பிறவும் உள்ளன. ஆண்டும்தோறும் 1.7 மில்லியன் நபர்கள் பார்வையிடுவதாக அறியப்படுகிறது. இது ஏழு கிளை நூலகங்களுடன் இரண்டு அறிவுவள நூலகங்களையும் கொண்டுள்ளது. வாகன் நகரில் வாழும் பன்மொழிச் சூழலுக்கேற்றவாறு ஆங்கிலம், பிரெஞ்சு மட்டுமின்றி சீனம், பஞ்சாபி, தமிழ் எசுப்பானியம், உருசியம், இத்தாலியம், கொரியம், எபிரேயம், இந்தி, உருது, குசராத்தி, பாரசீகம், போர்த்துகீசம், மலையாளம், வியட்நாமியம் ஆகிய மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான நூல்களைக் கொண்டுள்ளது. இதன் தற்போதைய தலைவராக மர்கி சிங்கிள்டன் உள்ளார்.

உறுப்பினர்களுக்கான வசதி[தொகு]

வாகன் நகரில் வசிப்போருக்கும், சொத்துரிமை உள்ளோருக்கும், கல்வி கற்போருக்கும் பணிபுரிவோருக்கும் இலவச உறுப்பினர் அட்டை வழங்கப்படும். இதுமட்டுமின்றி, அரோரா பொது நூலகம், பிரம்ப்டன் நூலகம், கலிடன் பொது நூலகம், கிங் டவுன்சிப் நூலகம், நியுமார்க்கட் நூலகம், ரிச்மண்டு பொது நூலகம், மர்க்கம் பொது நூலகம் ஆகியவற்றில் உறுப்பினராய் இருப்பவர்க்கும் இலவச உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. மற்றவர்கள் ஆண்டுக் கட்டணமாக $80 பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

சேவைகள்[தொகு]

நூலக உறுப்பினர்களுக்கு நூல்கள், இணையவழி மின்னூல்கள், ஒலிநாடாக்கள் உட்பட அனைத்து உள்ளடக்கங்களும் கிடைக்கின்றன. அவை:

 • தகவல் மற்றும் மேற்கோள் நூல்கள்
 • எழுத்து தரவுத்தளத்திற்கு முழு அணுக்கம்
 • குழுத் தகவல்கள்
 • இணைய அணுக்கம்
 • குழந்தைகள், இளையோர், பெரியோர்களுக்கான நிகழ்ச்சிகள்
 • பிற நூலக நூல்கள்
 • பதிவிறக்கக் கூடிய இலவச ஒலிக்கோப்புகள்
 • பொதுவான மைக்ரோசாப்ட் சேவைகள்
 • நூலகருக்கு மின்னஞ்சல் அனுப்புதல்
 • இணையவழி ஆய்வுக்கான மடலாடல் சேவை
 • வணிக உள்ளடக்கங்கள்
 • படிக்கும் அறைகள்
 • மின்வருடி, நகலெடுப்பான், அச்சுப்பொறிகள்
 • ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்க உதவி
 • தமிழ் உட்பட பன்மொழிகளில் நூல் திரட்டுகள்
 • மின்னணு உள்ளடக்கங்கள்

சிறப்புத் திரட்டுகள்[தொகு]

பலவித படிப்பாளர்களுக்காக சிறப்புத் திரட்டுகள் உள்ளன. பெரியோர்க்கான கல்வியறிவு – இத்திரட்டில் உள்ளவை பெரியவர்கள் அடிப்படை அறிவைப் பெற்றிருக்கத் தேவையான நூல்கள், இணைய இணைப்புகள், ஒலிக்கோப்புகள், தரவுதளங்கள் ஆகியன. இப்பிரிவு நூலகத்தின் அனைத்து வளாகங்களிலும் உள்ளது.

பிளாக் எரிடேச்சு - இது 1989 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டஃபரின் கிளார்க் நூலகத்தில் இப்பிரிவு உள்ளது.

திரைத்துறைத் திரட்டுகள் - இது பியரே பெர்டன் நூலகத்திலும், பதுசுட் கிளார்க் நூலகத்திலும் உள்ளது. விருதுபெற்ற உலகத்திரைப்படங்கள் இத்திரட்டில் உள்ளன. சிறப்பாகத் தாயரிக்கப்பட்ட திரைப்படங்களும் இயக்குனர்களின் திறனை வெளிக்காட்டும் திரைப்படங்களும் இங்கே உள்ளன.

இரண்டாம் மொழியாக ஆங்கிலம் – இத்திரட்டில் ஆங்கிலம் கற்க விரும்பும் பயனர்களுக்கான நூல்கள், குறுவட்டுகள், ஒலிக்கோப்புகள் ஆகியன உள்ளன. மேலும், வெளினாட்டு ஆங்கிலத் தேர்வுகளுக்கான பல ஆக்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரச ஆவணங்கள் – பதுசுட் கிளார்க் நூலகத்தில் இத்திரட்டு உள்ளது. மைய, மாநில அரசுகளின் ஆவணங்களான கணக்கெடுப்புத் தரவுகள், கொள்கைகள், ஆய்வுப் பக்கங்கள், வரலாற்றுப் பதிவுகள் ஆகியன உள்ளன.

உள்ளூர் தொடர்பானவை – இன வாரியாக, குலவாரியாக மக்களின் குடும்ப அமைப்புகளை உருவாக்க இது உதவும். தற்கால, முற்கால உள்ளூர் ஆவணங்களும் இதில் அடக்கம். வாகன் என்னும் நகரின் வளர்ச்சியை, அதன் சிற்றூர் நிலையிலிருந்து காட்டும் ஆவணங்களும் இங்கு உள்ளன.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகன்_பொது_நூலகங்கள்&oldid=1844502" இருந்து மீள்விக்கப்பட்டது