வழங்கிப்பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வழங்கிப்பண்ணை (Server Farm) என்பது, பெரும் நிறுவனங்களினுடைய வழங்கித் தேவைகள் தனியொரு வழங்கி கணினியின் இயலுகைகளை தாண்டிப்போகும் போது, அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக உருவாக்கப்படும் வழங்கிக் கணினிகளின் தொகுதி ஆகும்.

பொதுவாக வழங்கிப்பண்ணைகளில் ஒரே நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முதன்மை வழங்கியும் அதற்குக் காப்பாக காப்பு வழங்கியும் காணப்படும். முதன்மை வழங்கி செயலிழக்கும் சந்தர்ப்பத்தில் காப்பு வழங்கி இடையீடின்றி பணியை செய்வதோடு, தடையற்ற சேவையை உறுதிப்படுத்தும்.

தற்போது பெரு நிறுவனங்களில் Mainframe கணினிகளின் பயன்பாட்டுக்கு மாற்றாக, அல்லது அதனோடு ஒத்தியங்கும் வண்ணம் வழங்கிப்பண்ணைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வழங்கிப்பண்ணைகள் Mainframe கணினிகளுக்கு நிகரான மாற்றாக முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது.

கூகிள் போன்ற இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்கிப்பண்ணைகளைப் பயன்படுத்துகின்றன.

நுட்பியற் சொற்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழங்கிப்பண்ணை&oldid=2207836" இருந்து மீள்விக்கப்பட்டது