வளையயெக்சேன் தயோல்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
வளையயெக்சேன் தயோல் | |
இனங்காட்டிகள் | |
1569-69-3 | |
ChemSpider | 14555 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15290 |
| |
UNII | N8HOD9900V |
பண்புகள் | |
C6H12S | |
வாய்ப்பாட்டு எடை | 116.22 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.95 கி/செ.மீ3 |
கொதிநிலை | 158 முதல் 160 °C (316 முதல் 320 °F; 431 முதல் 433 K) |
குறைவு | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வளையயெக்சேன் தயோல் (Cyclohexanethiol) என்பது C6H11SH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். தயோல் வகை சேர்மமான இது நிறமற்றதாகவும் கடுமையான நெடியுடைய சேர்ம்மாகவும் காணப்படுகிறது. பொதுவாக சைக்ளோயெக்சேன் தயோல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]கார்பனிருசல்பைடை கந்தகத்தின் மூலமாகப் பயன்படுத்தி வளையயெக்சேனை ஓர் இயங்கு உறுப்பு வினையின் மூலம் வினைப்படுத்தி முதன்முதலில் வளையயெக்சேன் தயோல் தயாரிக்கப்பட்டது. [1] ஓர் உலோக சல்பைடு வினையூக்கியின் மீது ஐதரசன் சல்பைடு முன்னிலையில் வளையயெக்சனோனை ஐதரசனேற்றம் செய்து தொழில் முறையாக வளையயெக்சேன் தயோல் தயாரிக்கப்படுகிறது.
- C6H10O + H2S + H2 → C6H11SH + H2O
நிக்கல் சல்பைடு முன்னிலையில் வளைய்யெக்சீனுடன் ஐதரசன் சல்பைடை சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கிறார்கள்.[2]
பாதுகாப்பு
[தொகு]சுண்டெலிக்குள் ஊசி மூலமாகச் செலுத்தப்பட்டால் வளையயெக்சேன் தயோலினுடைய உயிர் கொல்லும் அளவு கிலோகிராமுக்கு 316 மில்லி கிராம் உள்ளதாக அமெரிக்க சுகாதார, கல்வி மற்றும் நல்வாழ்வுத்துறை மதிப்பீடு செய்துள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kharasch, M.S.; Eberly, Kenneth (February 1941). "Reactions of Atoms and Free Radicals in Solution. III. The Introduction of a Mercaptan Group into Cyclohexane". J. Am. Chem. Soc. 63 (2): 625. doi:10.1021/ja01847a508.
- ↑ Kathrin-Maria Roy "Thiols and Organic sulphides" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH Verlag, Weinheim. எஆசு:10.1002/14356007.a26_767
- ↑ Occupational Exposure to N-alkane Mono Thiols, Cyclohexanethiol, and Benzenethiol. U.S. Government Printing Office. 1978.