உள்ளடக்கத்துக்குச் செல்

வளி வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளிவளர்ப்பு முறையில் வளர்க்கப்பட்ட தாவரம் - நாசா ஆராய்ச்சி, 1998.

வளி வளர்ப்பு (aeroponics) என்பது தாவரங்களை சாதாரணமாக மண்ணில் வளர்க்காமல், மாற்றாக காற்று அல்லது மூடுபனியில் வளர்ப்பதாகும். இது நீரியல் வளர்ப்பு மற்றும் உயிரணு வளர்ப்பிலிருந்து மாறுபட்டது. இவ்விரண்டிலும் ஊடகம் பயன்படுத்தப்படுகிறது. வளி வளர்ப்பில் வளர்ப்பூடகம் ஏதும் பயன்படுத்தப்படுவதில்லை.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stoner, R.J. and J.M. Clawson (1997-1998). A High Performance, Gravity Insensitive, Enclosed Aeroponic System for Food Production in Space. Principal Investigator, NASA SBIR NAS10-98030.

வளி வளர்ப்பு:முன்னுரை:

*இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமும் விவசாயிகளும்தான்.விவசாயத்தைப் பொருத்தவரையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.விவசாயத்திற்க்கு அடிப்படைத் தேவையாய் இருப்பது மண் மற்றும் நீர்தான்.ஆனால் நிலம் இல்லாமல் மண் இல்லாமல் செடிகளை வளர்க்கலாம்.இந்த முறைதான் வளி வளர்ப்பு முறை.இந்த முறை மிகவும் பழமையான ஒரு அறிவியல் முறையாகும்.இப்பொழுது ஒரு தொழில்நுட்பமாக வளர்ந்து வருகிறது.

செய்முறை:*குறிப்பிட்ட இடத்தில் பார்லி ஸௌவுஸ் அல்லது கிரீன் ஹௌவுஸ் அமைக்கப்படுகின்றன.அங்கு வரிசையாக பிளாஸ்டிக் பைப்புகளை அமைக்க வேண்டும்.அதில் செடிகளுக்கு தண்ணீர் பரவலாக செல்லுமாறு துளைகள் அமைக்கப்படுகின்றன.பின் ஒரு சின்ன பிளாஸ்டிக் கப்பில் கோகோபீட் என்ற தேங்காய் நார் துகள்களை நிரப்ப வேண்டும்.அதில் 2விதைகளை நிரப்ப வேண்டும்.விதை இந்த இடத்தில்தான் வேர் பிடிக்கத் துவங்குகிறது.முதல் ‌கட்டமாக பிளாஸ்டிக் கப்பில் நிரப்பப்பட்ட விதை 15 நாட்களுக்குள் வேர் பிடிக்கத் துவங்குகிறது.

*இந்த வேர் பிடிக்கும் காலகட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க நீர் மற்றும் ஒரே மாதிரியான, தட்பவெப்ப நிலை இ‌ருக்குமாறு பார்த்துக்கொள்ளும் படுகிறது.அதற்கு பிறகு செடிகள் வேர் விட்டதும் அவை இரண்டாவது கட்டமாக நெட்பாட்ஸ்க்கு எடுத்துச் செல்லப்படுகிறது.அங்கு மீண்டும் அந்த செடிக்கு தேவையான நீர் பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் செலுத்தப்படுகிறது.தேவையான நீரை தக்கவைத்துக்கொள்ள தேங்காய் நார்கள் பக்கபலமாக இருக்கும்.பிறகு இருதியாக செடிகள் முழுமையாக வளர்ச்சியடையும்.இந்த முறை மூலம் வளர்க்கப்படும் கீரைகள் 45 நாட்களுக்குள் அறுவடை செய்யமுடியும்.1 வருடத்திற்கு 10 மதுரை சாகுபடி செய்யலாம்.

வளி வளர்ப்பு முறையின் நன்மைகள்:

*90% நீரை சேமிக்க முடியும்.

*மூடப்பட்ட பைப்பில் இருக்கும் துளைகள் வழியாக செடிகள் வளர்க்கப்படுவதால் எளிதில் நீர் ஆவியாகும் பிரச்சினையும் இல்லை.

*மேலும் இதற்கு உரம் தேவையில்லை என்பதால் பூச்சி தாக்குதலும், மண் சார்ந்த நோய்களும் ஏற்ப்படுவதில்லை.

முடிவுரை:

  • மண்தான் விவசாயத்திற்கு மிகப்பெரிய ஆதாரம் என்று நினைத்தோம்.ஆனால் மண் இல்லாமலேயே விவசாயம் செய்ய முடியும் என்று வளி வளர்ப்பு முறை நிரூபித்துள்ளது.எதிற்காலத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தை நாம் அனைவரும் செய்ய வேண்டும்.நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயத்தைக் காப்போம்! விவசாயிகளையும் காப்போம்!...
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளி_வளர்ப்பு&oldid=3584702" இலிருந்து மீள்விக்கப்பட்டது