வளநாடு நாகம்மாள் கோவில்
வளநாடு நாகம்மாள் கோவிலானது , இந்தியாவில், தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், வளநாடு என்ற ஊரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோவில் ஆகும். இது திருச்சி நகரிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும் மணப்பாறையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மூலவர்
[தொகு]இத்தலத்தின் மூலவர், கருநாகம், செந்நாகம், பொன்னாகத்தின் ரூபங்களான கருநாகாம்பிகையம்மன், நாககாளியம்மன், தேவி கருமாரியம்மன் ஆவார்கள். கருவறைக்கு தெற்கே, கோவில் அமைய காரணமாக இருந்த , ஸ்ரீ முனியாண்டி ஸ்ரீ முனியப்பனும், வடக்கே நாககாளிதேவியும் அமைந்துள்ளார்கள்.
பூசைகள்
[தொகு]இக்கோவிலில் தினம்தோறும், சிவாகம முறைப்படி காலையிலும் மாலையிலும் இருவேளை பூசைகள் நடைபெற்று வருகிறது. வெள்ளி, செவ்வாய் மற்றும் பௌர்ணமி, அம்மாவசை போன்ற நாட்களில் மகா யாகங்களும், சிறப்பு வழிபாடும், உச்ச காலப் பூசையும் நடந்து வருகிறது .
தல வரலாறு
[தொகு]சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரின் வடக்கே இரண்டு பர்லாங் தூரத்தில் உள்ள வயலில், முத்து என்ற பெயருடைய வயதான ஒருவர் ஏர்கலப்பையில் உழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஒரு கல்லில் கலப்பை தட்டி கல் உடைந்தது, அதை பெரிதாக பார்க்காத அவர், அக்கல்லை வரப்பின் ஓரத்தில் தூக்கி வீசிவிட்டு, மற்றொரு கலப்பையை மாட்டி மீண்டும் உழத்தொடங்கியுள்ளார். இரண்டு சுற்று சுற்றி முடித்து மூன்றாவது சுற்றில் அதே இடத்தில் கலப்பை மீண்டும் உடைந்துள்ளது. கலப்பை உடைய காரணம் என்னவென்று அறிவதற்கு அவ்விடத்தைத் தோண்ட முயற்சித்தாதாகவும், அப்பொழுது அவர் காலில் மண்வெட்டி பட்டு இரத்தம் வந்ததாகவும், பிறகு பச்சிலை மருந்தை கசக்கி அதன் சாறெடுத்து காயத்திற்கு இட்டு, காலில் கட்டு போட்ட அவர் அருகில் உள்ள மரத்தடி நிழலில் உறங்கிவிட்டதாகவும் கதை வழங்கி வருகிறது. அன்றிரவு சுமார் 12 மணிக்கு மேல் அவர் கனவில் வானத்திற்கும் பூமிக்கும் கையில் உடுக்கையோடு எழுந்து நின்ற ஓர் உருவமானது " அப்பா , தான் தான் முனியாண்டி , பொன்னி கண்ட வளநாட்டில், முனியாண்டி முனியப்பன் ஆகிய நாங்களும், பொன்னர் சங்கர் காவல் தெய்வமான தூண்டிமுனியும், சதுரகிரி மலையில் கழுதை கல்முனியும், தங்காள் நந்தவனத்தில் சடையாண்டி முனியும், பொன்னர் சங்கர் கோட்டையில் மகாமுனி மற்றும் கோட்டைமுனியோடு நாங்கள் ஏழு பெரும் முனிகளாக வாழ்ந்து வருகிறோம்,நீ எங்களை எழுப்பிவிட்டாய். காலத்தின் கட்டளை ஆரம்பமாகிவிட்டது .எங்களை ஒரு இடத்தில்வைத்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் நீ வழிபட்டு வரவேண்டும் . எங்களுக்கென்று உன் தலைமுறையில் ஒரு பிள்ளை பிறக்கும். அதாவது உன் மூன்று கரை பங்காளிகளில் உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும், அக்குழந்தைக்கு ஏழு கரை பங்காளிகள் . அவ்வேழுகரை பங்காளிகளில் உனக்கு பிறந்த அவ்வொரு ஆண் குழந்தைக்கு ஏழு ஆண் குழந்தை பிறக்கும் . அதில் மூன்றாவது குழந்தைதான் எங்களுக்கானவன். அவன் தலையில் நாகத்தோடும், கையில் சூலத்தோடும் பிறப்பான். அவன், பத்து வயதில் வீட்டை விட்டு பிரிந்து, பதினாறு வருடம் வனவாச வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கையை வாழ்வான்" என்று கூறியதாம் . அதற்கு அவர் , "அப்பா சிவனே அப்படியே பண்ட்ரேய்யா. ஆனால் உன் சிலைக்கு அடையாளம் என்ன? என்று வினவியத்திற்கு மாபெரும் உயரம் கொண்ட அவ்வுருவமானது "அடேய் பைத்தியக்காரா எங்களுக்கு பூஜை செய்ய பிறப்பெடுக்கும் என் மகனின் கையில் உள்ளது போல் எங்கள் மேலும் சூலம் இருக்கும் " என்று மறைந்ததாம் அவ்வுருவம் . பிறகு அவர் அவ்விடத்தை முழுமையாக தோண்டும்போது தெய்வம் சொன்னது போல் இரண்டு கல்உருவம் சுயம்பாக தோன்றியது. அதை எடுத்து பார்க்கும்பொழுது இரண்டு கற்களிலும் சூலவடிவம் இருந்தது அதை பார்த்த அவர் அய்யா !.. என்ற கூச்சலோடு கீழே விழுந்து அழுது புலம்பி புரண்டு வேண்ட ஆரம்பித்தாராம் , கற்பூரம் ஏற்றி வழிபடவும் தொடங்கினாராம். பிறகு அடுத்த அற்புதமான நிகழ்வு நடந்தது . மூன்று கரைகளில் பிறந்த ஒரு ஆண் குழந்தையான முத்து என்ற அவருக்கு, பாலுசாமி என்ற ஆண்குழந்தை பிறந்தது. அவருக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் மூன்றாவதாக தெய்வகடாக்ஷத்தோடு, கையில் சூலத்துடனும், தலையில் நாகத்துடனும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கிய முத்து என்ற அவர் பிறந்த அக்குழந்தைக்கு "மணிமாறன்" என்ற பெயரை அவர் வாயிலாகவே சூட்டினார் . மணிமாறன் என்றவர் மூன்று வயதை எட்டும்பொழுது முத்து என்றவர் காலமானார் . மணிமாறன் என்றவர் பத்து வயதில் வீட்டை விட்டு சென்றுவிட்டாராம் . பிறகு வனவாச வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கையை வாழ்ந்து வந்த சூழலில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டிற்கு அதிக பாம்புகள் வர ஆரம்பித்தது. அவர் கனவிலும், நிஜத்திலும் சில சம்பவத்தின் மூலமாகவும் தொந்தரவு செய்து வந்ததாம். இதை அவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு விதியின் சூட்சமம் அறியாத அவர் வீட்டில் சித்திரை மாதம், பௌர்ணமி அன்று, (1994) வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் கருநாகம் புகுந்தது. தூங்கிக்கொண்டிருந்த அவர் மீது அக்கருநாகமானது ஏறி படமெடுத்தாடியதாகவும் , அலறி அடித்து ஓடிவந்த அவரது மனைவி அவரை எழுப்பிய போது பாம்பைக் கண்ட அவர் மயக்க நிலைக்கு சென்றாரெனவும் வரலாறு கூறுகிறது. உடனே சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு பெரியவர்கள் வாயிலாக சிலபல உண்மைகள் தெரிய ஆரம்பித்து, அவ்விடத்தை தேடி சென்று வழிபடவும், பூஜை செய்யவும் ஆரம்பித்தார் என வளநாடு ஊர் மக்கள் மூலமாக கூறப்படுகிறது. காலப்போக்கில் தெய்வ அருளால் ஆலயம் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்புகள்
[தொகு]வளநாட்டு அரசிகள் என போற்றப்படு இவர்களது ஆலயத்தில் , சூல வடிவம் பதிந்த ஸ்ரீ முனியாண்டி ஸ்ரீ முனியப்பனது சுயம்பு விக்ரகம், இன்று வரை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது . நாக தேவதைகளான கருநாகம், செந்நாகம் மற்றும் பொன்னாகம் ஆகிய நாகங்கள் இன்று வரை ஆலய பக்தர்களால் நேரடி தரிசனம் செய்யும் அளவிற்கு உயிரோடு இருந்து வருகிறதென ஆலயத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் கூறுகின்றனர் . ஒவ்வொரு அம்மாவாசை மற்றும் பௌர்ணமியன்றும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மஹா யாகங்கள் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் , வெள்ளி செவ்வாய் போன்ற கிழமைகளிலும் பௌர்ணமி மற்றும் அம்மாவசை போன்ற நாட்களிலும் , பல பெரும் உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு பிரம்படித்து தீர்வு காணப்பட்டு வருகிறது எனவும், பல மன ரீதியான பிரச்சனைகளுக்கு பூஜை முறையின் மூலமும் தீர்வுகாணப்படுகிறதென்றும், நாக தோஷம் , தார தோஷம் , புத்திர தோஷம் , மாங்கல்ய தோஷம் போன்ற பலவிதமான தோஷங்கள் அக்னி தேவரின் முன்னிலையில் கழிக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர் . மேலும் , பல பேருக்கு மது போன்ற தீய பழக்கங்களிலிருந்து விடு பட அங்கு நடந்து வரும் பூஜை முறைகள் வழிவகை செய்கிறதாகவும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பல விதமான கேள்விகளுக்கு உத்தரவின் வழியாக பதில்கள் கிடைக்கிறதாகவும் குழந்தை இல்லாத பல தம்பதியினர்கள், இக்கோவிலில் தொட்டிமடல் கட்டி மூன்று அம்மாவாசை மற்றும் மூன்று பௌர்ணமிகள் தொடர்ந்து பூஜையில் கலந்துவர, குழந்தை பேரு உண்டாகிறதென்றம் கூறுகின்றனர் . சுமார் 26 வருடங்களாக மஹா அன்னதானமும் நடைபெற்று வருகிறது .
திருத்தல அமைப்பு
[தொகு]இக்கோவிலில் கொடிமரம் தாண்டி நுழைந்ததும் முன்புறம் ஸ்ரீ கழுகுராண்டி தெய்வமும், இடப்புறம் ஸ்ரீ நாககருப்பசாமி சன்னதியும் , வலதுபுறம் குழந்தை வரம் அருளும் ஸ்ரீ தொட்டிசியம்மன் சன்னதியும் , நடுப்புறும் நாகதேவியின் விக்கிரகமும் அமைந்துள்ளது . சற்று உள்ளே செல்ல , இடதுபுறம் ஸ்ரீ நாககணபதி சன்னதி மற்றும் வலதுபுறம் ஸ்ரீ பாலமுருகன் சன்னதியோடு, இருபுறமும் துவாரபாலகிகளோடு மூல விக்கிரகத்தில் காட்சி அளிக்கிறார்கள் முப்பெரும் தேவியர்கள். அவர்களை தரிசித்து இடது புறமாக வெளிவரும்போது அங்கு சுமார் 27 அடி உயரத்தில் வலது கையில் அரிவாள் மற்றும் கத்தியும் இடது கையில் அகோர நாகங்களையும் பிடித்தவாறு ஸ்ரீ முனியாண்டி, ஸ்ரீ முனியப்பனது பெரும் தெய்வசிலை அமைந்துள்ளது. அவர்களுக்கு கீழே அவர்களது சுயம்பு விக்ரகமும் அமைந்துள்ளது.
விழாக்கள்
[தொகு]வளநாடு முப்பெரும் தேவியரான இவர்களின் இவ்வாலயத்தில் , ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று மாபெரும் பால்குடம் நடைபெற்று வருகிறது . ஆலய பக்தர்கள் 9 நாள் காப்பு கட்டி விரதம் இருந்து பால்குடம் , நீர்க்குடம் , தீர்த்தகுடம் , அக்னிசட்டி , சிலாகுத்துதல் போன்ற நேர்த்திகடன் செலுத்துவார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- த. இ. க. வெளியிட்ட "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1"