வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புக் கட்டுரை/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின்லாந்தில் 1907இல் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 19 பெண் உறுப்பினர்களுள் 13 பேர். உலகத்திலேயே முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் இவர்களே.

பெண்கள் வாக்குரிமை என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும்.1979இல் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட "பெண்களுக்கு எதிரான அனைத்து வேறுபாட்டு ஒதுக்கல்களையும் ஒழித்தல் பற்றிய அறிக்கை"யின்படி, பெண் வாக்குரிமை ஒரு மனித உரிமையாகும்.