வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலப்பதிகாரம் சமணமத நூல் ஆயினும் இந்நூலினைப் படிக்குங்கால் இது மதசார்பற்ற நூல் என்றே தோன்றுமாறு இளங்கோவடிகள் இதனை யாத்துள்ளார். இந்நூலில் புத்த சமயக் கருத்துக்ள் மட்டுமன்றி பிற சமயக் கருத்துகளும் இடம் பெறுகின்றன. சிலப்பதிகாரம் சமணமத நூலாகும். ஆயினும் அந்நூலில் எந்த மதத்தினரையும் புண்படுத்தாத கருத்துக்களே உள்ளன. சிலப்பதிகாரத்தில் மத வேறுபடுகளைக் காண முடியாது. மாதரி எனும் இடைக்குல முதுமகள் கண்ணனை வழிபடும் வைணவ சமயத்தைச் சார்ந்தவளாயினும், இயக்கிக்கு பான்மடை கொடுத்து மீளும் ஏல்வையில் கவுந்தியடிகளைக் கண்ணில் கண்டு அவரை வணங்கிய செயலை அறியலாம். சேரன் செங்குட்டுவன் வட நாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அங்கிச்சாலையில் செய்த வேண்டுதலோடு நிற்காமல் சிவபெருமான் கோட்டம் புகுந்து அவர் தம் அடிகளையும் வணங்கினான். அங்குள்ள அரிதுயிலமர்ந்த பெம்மானுக்கு( திருவனந்தபுர பத்மநாபசாமி என்பர்) கடவுள் பணிபுரியும் சிலர் மாலையும் மலரும் கொணர்ந்து வாழ்த்தியளிக்க, அவற்றினைச் செங்குட்டுவன் தன் தோளின் மிசையணிந்தான். மேலும் சிலப்பதிகாரம், அலைவாய் முருகன் கோட்டத்தையும் திருச்செங்கோட்டினையும், ஏரகத்தையும், வெண்குன்றினையும் கூறுகிறது.