வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருஞானசம்பந்தமூர்த்தி என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரும், இறைவனான சிவபெருமான் மீது தேவாரப் பாடல்களை பாடியவரும் ஆவார். இவர் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார் தம்பதிகளுக்கு சீர்காழியில் மகனாகப் பிறந்தார். மூன்றாம் வயதில் தந்தையுடன் கோவிலுக்கு சென்றவர், தந்தை குளிக்க சென்ற பொழுது அவரைக் காணாது, அம்மையே, அப்பனே என்று அழ,. சிவபெருமானுடன் காட்சியளித்த உமையம்மை சம்மந்தருக்கு ஞானப்பால் அளித்தாகவும், வாயில் பாலொழுக நின்ற சம்மந்தரிடம் யார் பால்தந்ததென தந்தை வினவ, தேவாரத்தின் முதல் பாடலான "தோடுடைய செவியன்" என்று சம்மந்தர் பாடியதாக தொன்நம்பிக்கை உள்ளது.

மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று பாண்டிய நாடு சென்று, கூன்பாண்டியனின் வெப்புநோயை தீர்த்தவர். சமணர்களை அனல் வாதத்திலும்,புனல் வாதத்திலும் வென்றவர். பிள்ளை என்று சைவர்களால் அழைக்கப்பெறுகிறார். இவரின் வரலாறு பெரியபுராணத்தில் 1256 செய்யுட்களால் விவரிக்கப்பட்டுள்ளது.