வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கை நரம்புகளில் இசைக்கும் இராவணன்

இராவணன் இலங்கையை ஆண்ட சிறந்த சிவபக்தனாவார். இவர் சாமாகானம் பாடுவதிலும், யாழ் இசைப்பதிலும், ஓவியம் வரைவதிலும் சிறந்தவராக அறியப்பெறுகிறார். இவர் உமையும், சிவனும் வீற்றிருக்கும் இமயமலையை பெயர்த்தெடுத்தபொழுது, சிவபெருமான் பெருவிரலால் அழுத்த, யாழில் சாமகாணம் இசைத்தார். இசையில் மயங்கிய சிவபெருமான் சந்திரகாசம் எனும் வாளினையும், வாழ்நாட்களையும் அளித்தாக சைவ நூல்கள் கூறுகின்றன. இந்நிகழ்வின் காரணமாக சிவாலயங்களில் கைலாய மலையை சுமந்திருக்கும் இராவணனின் உருவம் சிவ வாகனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை அழியக்கூடாதென தவமியற்றி சிவபெருமானிடமிருந்து ஆத்ம லிங்கத்தினை இராவணன் பெற முயன்ற பொழுது, தேவர்களின் வேண்டுகோளுக்கினங்கி திருமால் இராவணனை ஆத்மலிங்கத்திற்கு பதிலாக பார்வதியை பெறும்படி செய்தார். இதனால் சினம் கொண்ட பார்வதி திருமால் இராமனாக பிறக்கும் பொழுது அவரது மனைவியை இராவணன் கவர்ந்து செல்வான் என்று சாபமளித்தாக நாரத புராணம் கூறுகிறது. மீண்டும் தவமிருந்து ஆத்மலிங்கம் பெற்று இலங்கைக்கு செல்லும் பொழுது, விநாயகர் அதனை தடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இவர் இருபத்தியேழு நூல்களை இயற்றிய தமிழ் நூலாசிரியராகவும் அறியப்பெறுகிறார்.