உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு தமிழ்ப்பாடல். இப்பாடலை எழுதியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவார். தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள இப்பாடல், ராக மாலிகையின் அடிப்படையில் அமைந்த இப்பாடல் பெரும்பாலான கருநாடக இசைக் கச்சேரிகளில் 'துக்கடா'வாகப் பாடப்படுகிறது. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் இதுவாகும். இந்தப் பாடல் எழுதப்பட்ட நாள் குறித்து தகவல் எதுவும் இல்லை. (அவரது வாழ்வில் நிகழ்ந்த ஒரு துக்க சம்பவத்தின் போது இப்பாடலை இயற்றியதாக கூறப்படுகிறது) இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியால் பாடப்பட்டிருக்கும் இப்பாடல், இசையுலகில் மிகப் பிரபலமானது.