வலைத்தள உள்ளடக்க எழுத்தாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலைத்தள உள்ளடக்க எழுத்தாளர் (Website content writer) என்பவர் வலைத்தளங்களுக்கு தேவையான உள்ளடக்கங்கள் எழுதுவதில் வல்லமை வாய்ந்தவர். உள்ளடக்கமானது, வலைத்தளங்கள் கொண்டுள்ள குறிப்பிட்ட வர்க்க வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல பிரிவுகளாகவும் நிலைகளாகவும் இருக்கும். உள்ளடக்கம் பயன்பாட்டாளர்களை கவரவும், தக்கவைக்கவும் உதவும் வண்ணம் முக்கிய வார்த்தைகளை கொண்டிருக்கவேண்டும்.

பல உள்ளடக்க தொகுப்புகள் ஒரு வலைத்தளம் விற்கும் பொருட்களையோ அல்லது அது வழங்கும் சேவைகளையோ சந்தைப்படுத்துவதில் குறியாக உள்ளன .ஆனால் வேறு சில வலைத்தளங்கள் மக்களுக்கு தேவைப்படும் தகவல்களை எளிதில் புரிய வைத்து அவர்களுக்கு உதவும் வண்ணம் உள்ளன.

உள்ளடக்க எழுத்தாளர்களின் செயல்பாடுகள்[தொகு]

திறமையுள்ள வலைத்தள உள்ளடக்க எழுத்தாளர்களின் தேவை இணையதளத்தில் பெருகி வருகிறது .இதற்கு காரணம் தனித்துவம் வாய்ந்த உள்ளடக்கங்கள் இணையதள வணிகத்திற்கு வருவாய் ஈட்டித்தருவதாக விளங்குகிறது . வலைத்தள உரிமையாளர்கள் பலதரப்பட்ட வேலைகளுக்கு உள்ளடக்க எழுத்தாளர்களையே சார்ந்துள்ளனர் .

1.உள்ளடக்க எழுத்தாளருக்கு அனுப்பும் முன் அனைத்து பணிகளையும் பகுத்து ஆராய்ந்து ,கொடுக்கப்பட்ட பணி அவ்வலைதளத்தின் குறிப்புரை URLன் வளர்ச்சிக்கு இயங்கவேண்டும் .

2.முக்கிய வார்த்தைகளை எழுத்தாளர்களிடம் கட்டுரையில் சேர்க்குமாறு வழங்கி அதன் பயன்பாடு அளவையும் குறிப்பிட வேண்டும் .

3.பார்வையாளர்களை கவர்ந்து அவர்களை வலைத்தளத்தில் தக்கவைக்கும் வகையில் உள்ளடக்கம் இருக்கவேண்டும் .பார்வையாளர் அதிக நேரத்தை செலவிட்டால் அவர் வாடிக்கையாளராக மாறுவதன் வாய்ப்பு பெருகும் .

இணையதள எழுத்தாளர்கள்/ அச்சிடும் எழுத்தாளர்கள்[தொகு]

எழுபத்து ஒன்பது விழுக்காடு பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தேவையுள்ள உட்பொருட்களை மட்டுமே படித்துவிட்டு தேவையற்றவற்றை ஒதுக்கிவிடுகின்றனர். எனவே வலைத்தள எழுத்தாளர்கள் பத்திகள், தலைப்புகள், மேற்கோள்கள் சேர்த்து படிப்பவரின் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் திறமை உள்ளவராக இருக்கவேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]