வரைவு:பெரிய ஷெய்குனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் வலிய்யுல் காமில்
முஹம்மது அபூபக்று மிஸ்கீன் ஸாஹிப் அல்-காஹிரி
பட்டம்கலீபதுல் குலபா, ஆலிம், அஸ்-ஸித்தீகீ, அல்-காஹிரி
பிறப்புமுஹம்மது அபூபக்று
1821 (1237 ஹிஜ்ரி)
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுகாயல்பட்டினம், மதராஸ் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு17, சூன், 1872 கி.பி; (7 ரபிஉல் ஆகிர், 1289 ஹிஜ்ரி)
வேறு பெயர்கள்பெரிய செய்குனா
இனம்அரபியர்-தமிழர்
பிராந்தியம்பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு, இலங்கை
பணிஅறிஞர், வியாபாரி
மதப்பிரிவுஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி)
சட்டநெறிஷாஃபிʽஈ மத்ஹபு
சமய நம்பிக்கைஸூபி
முதன்மை ஆர்வம்அரபு, ஹதீத், ஃபிக்ஹ், சூஃபியம்
சூபித்துவம் order]]ஷாதுலிய்யா-பாஸிய்யா
Succeeded byஇமாமுல் ஹிந்து.‌ முஹம்மது நூஹ்

பெரிய ஷெய்குனா அல்லது முஹம்மது அபூபக்று மிஸ்கீன் ஸாஹிப் (அரபு: مُحَمَّد أبُوبَكر مِسْكِيْن صَاحِب) என்றரியப்படுபவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்க அறிஞரும், இரத்தின வியாபாரியும், ஸூபி மகானும் ஆவார்.

இவர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் இலங்கையில் ஷாதுலிய்யா ஃபாஸிய்யா ஸூபி பள்ளியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.[1]

இளமைப் பருவம்[தொகு]

பெரிய ஷெய்குனா 1821 ல் இந்தியாவின் காயல்பட்டினத்தில் முஹம்மது இப்றாஹீம் - ஆஸியா இணையருக்கு மூத்த மகனாக பிறந்தார் இவருடன் பிறந்தவர்கள் மூவர் 2 சகோதரர்கள் மற்றும் 1 சகோதரி செய்கு அப்துல் காதிர் ஆலிம் (நடு செய்குனா), இமாமுல் ஹிந்து. முஹம்மது நூஹ் லெப்பை (சின்ன செய்குனா) மற்றும் முஹம்மது ஃபாத்திமா ஆகியோர் ஆகும். இவர் இரண்டாம் கலீஃபா அபூபக்கர் (றளி) யின் வழித்தோன்றல் ஆவார்[2]

கல்வி[தொகு]

பெரிய ஷெய்குனா இளம் வயதிலேயே குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழானார். பின்னர் ரெக்க வெட்டி ஆலிம் என்ற ஸையிது முஹம்மத் ஆலிமிடம் மார்க்கக் கல்வி கற்றார். அல்லாமா. காதிர் லப்பை ஆலிமிடம் தஸவ்வுப் எனும் ஆன்ம கலையை கற்றார்கள்

பிரச்சாரப் பணி[தொகு]

ஹஜ் செய்ய மக்கா சென்று அங்கு ஹறம் ஷரீபில் இமாம் ஃபாஸியை சந்தித்து பய்அத் பெற்றார் பின் இமாம் ஃபாஸியின் அறிவுறுத்தலின்படி இந்தியா மற்றும் இலங்கையில் ஷாதுலிய்யா ஃபாஸிய்யா ஸூபி பள்ளியை பலப்படுத்தினார். இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் பல ஜாவியாக்களை நிர்மாணித்தார்.

இறப்பு[தொகு]

மக்காவிலிருந்து ஜித்தா வந்து பின் அங்கிருந்து கப்பல் மூலம் தாயகம் திரும்பும் போது சுகவீனம் ஏற்பட்டு நடுக்கடலிலேயே மரணம் உற்றார். அவரது உடல் கடலிலேயே இறக்கப்பட்டது. பய்அத் பெற்று 8 ஆண்டுகளில் பல ஆன்மீகப் பணிகளை செய்துள்ளார் இவருக்கு பின் இமாமுல் ஹிந்து. முஹம்மது நூஹ் லெப்பை (சின்ன செய்குனா) அவர்கள் கலீஃபா பொறுப்பை ஏற்றார்.

  1. மானா மக்கீன். வரலாற்றில் இலங்கையும் காயல்பட்டினமும். https://noolaham.net/project/39/3836/3836.pdf. 
  2. "காயல்பட்டணத்தில் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிசத்தினரின் தலைமுறைப் பட்டியல் - Sufi Manzil".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைவு:பெரிய_ஷெய்குனா&oldid=3845047" இலிருந்து மீள்விக்கப்பட்டது