வந்தனா ராவ்
Appearance
வந்தனா ராவ் (Vandana Rao) ஒரு முன்னாள் இந்திய தடகள விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியில் பிறந்துள்ளார். 1984 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டிகளில் இந்தியாவின் சார்பாக வந்தனா பங்கேற்றார். வந்தனாவின் சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் இவருக்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்துள்ளது. பிரபல வளைகோல் பந்தாட்ட வீர்ர் மற்றும் பயிற்சியாளரான யோவாகுயிம் கார்வால்கோவை திருமணம் செய்து கொண்டார். ஒரு தனியார் பயணச் சேவை நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இவர் சுற்றுலா மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- sports references பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்
- 25 years later
- Times of India photo
- [1]