வந்தனா கவ்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வந்தனா கவ்லி (Vandana Gawli) ஓர் இந்திய அரசியல்வாதியும், அகில பாரதிய சேனாவைச் சேர்ந்த் அரசியல்வாதியும் ஆவார்.[1][2] இவர் ஏ. பி. எஸ். தலைவர் அருண் கவ்லியின் மைத்துனர் ஆவார். [3]

இவர் 2007 மற்றும் 2012ஆம் ஆண்டு பெருநகர மும்பை மாநகராட்சி தேர்தலில் பகுதி 204 தொகுதியில் (பைகுல்லா தொடருந்து நிலையம்) வெற்றி பெற்றார்.[4][5] 2007-இல், இவர் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களைவிட மிகப்பெரிய வெற்றி வித்தியாசத்தைப் பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 11,868 வாக்குகள் (வெற்றி வித்தியாசம் 9,512 வாக்குகள்).[3] 2012 நகராட்சித் தேர்தலுக்குப் பிறகு, இவர் அனைத்து நில இட ஒதுக்கீடு பிரச்சினைகளையும் கையாளும் நகராட்சி குடிமை மேம்பாட்டுக் குழுவின் தலைவரானார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தனா_கவ்லி&oldid=3893385" இலிருந்து மீள்விக்கப்பட்டது