உள்ளடக்கத்துக்குச் செல்

வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர் அல்லது வத்திக்கான் நகருக்கான திருத்தந்தையின் செயலர் அல்லது திருப்பீடச் செயலர் என்பவர் உரோமை செயலகங்களில் முகவும் குறிக்கத்தக்கதும், பழையதுமான வத்திக்கான் செயலகத்தின் தலைவர் ஆவர்.[1] வத்திக்கான் நகர் மற்றும் திருப்பீடம் ஆகியவற்றின் அரசியல் மற்றும் வெளியுறவு செயல்பாடுகளை இச்செயலகம் திருத்தந்தையின் பெயரால் செய்கின்றது. தற்போதய செயலர் கர்தினால் பெத்ரோ பெரோலின் ஆவார்.[2]

செயலரை நியமிப்பவர் திருத்தந்தை ஆவார். இப்பதவியினை வகிப்பவர் ஒரு கர்தினாலாக இருக்க வேண்டும். இப்பதவி இடம் காலியானால், கர்தினால் அல்லாத ஒருவர் சார்பு-நிலை செயலராக (Pro-Secretary) இப்பதவியினை வகிக்கலாம். திருத்தந்தையின் ஆட்சிப்பீடம் காலியாகும் போது இவரின் பதவிக்காலம் முடிவுறும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Profile: The Secretariat of State". The Holy See. பார்க்கப்பட்ட நாள் 2007-04-18.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-22. பார்க்கப்பட்ட நாள் 2015-02-25.