வண்ணத் தொலைக்காட்சி வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலர் டிவி வழக்கு
J. Jayalalithaa.jpg
ஜெ.ஜெயலலிதா
நாள்14 மே1998 1998-05-14)
அமைவிடம்சென்னை
பங்கேற்றோர்ஜெ. ஜெயலலிதா, வி. கே. சசிகலா, டி. எம். செல்வகணபதி
தண்டனைஅதிகார த்தை தவறாக பயன்படுத்துதல், ஊழல், குற்றவியல் சதி
தீர்ப்பு
உயர் நீதிமன்றம்: அனைவருக்கும் எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை
விசாரணை நீதிமன்றம்: ஜெயலலிதா, சசிகலா விடுதலை; செல்வகணபதி உட்பட ஏழு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை
வழக்கு11 ஆண்டுகள்

வண்ணத் தொலைக்காட்சி வழக்கு (Colour TV case, கலர் டிவி வழக்கு) ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு பரபரப்பான வழக்கு. ஜெயலலிதா, 1991-96 போது தென்னிந்தியாவில் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சர். ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, மற்றும் தன்னுடைய சக மந்திரி டி. எம். செல்வகணபதி ஆகியோர் மதிப்பீட்டை விட அதிக விலையில் கலர் டிவி வாங்க அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர். இதற்காக 10.16 கோடி இலஞ்சம் பெற்றதாக ஜெயலலிதா, சசிகலா மற்றும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர். 7 டிசம்பர் 1998 அன்று நீதித்துறை காவலில் வைக்கப்பட்டனர். 1998 ல் கருணாநிதி தலைமையில் திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) அரசாங்கத்தின் போது வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. 30 மே 2000 அன்று, ஜெயலலிதா மற்றும் சசிகலா விடுதலை செய்யப்பட்டனர், டி. எம். செல்வகணபதி மற்றும் ஆறு மற்றவர்கள் கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பு போது 10,000 அபராத தொகையும் ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதுவே ஒரு முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட முதல் நிகழ்வதாகும். செல்வகணபதி தீர்ப்பு காலத்தில் மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவரே ஊழலுக்காக பாராளுமன்றத்தில் தகுதிநீக்கம் செய்யப்படுவதில் முதல் தமிழ்நாடு அரசியல்வாதி ஆனார்.

4 டிசம்பர் 2001 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

காலவரிசை[தொகு]

* 7 டிசம்பர் 1996 - நீதிமன்றம் ஜெயலலிதாவின் முன் ஜாமீனை நிராகரித்து வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

  • 14 மே1998 - ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் புறநகர் விவகார அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் தலைமை செயலாளர் என் ஹரிபாஸ்கர், முன்னாள் மாநில கிராம அபிவிருத்தி செயலாளர் எச் எம் பாண்டே, முன்னாள் முன்னாள் கிராம அபிவிருத்தி பணிப்பாளர் எம் மூர்த்தி, பி.ஏ. ஜர்னத்தனன், ஆளும் கட்சி அமைச்சரின் செயலாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள், வாரிய உருப்பினரான திரு.துரை மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது..[1]
  • 28 டிசம்பர் 1998 - வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது.[2]
  • 5 மே 2000 - உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திடம் தற்காப்பு சாட்சி ஆய்வு செய்ய ஜெயலலிதாவிற்கு அதிக நேரம் கொடுக்குமாறு கேட்டது.[3]
  • 29 மே 2000 - ஜெயலலிதா, சசிகலா விடுதலை; செல்வகணபதி உட்பட ஏழு பேருக்கு ஐந்து ஆண்டு சிறை மற்றும் 10,000 அபராதம்
  • 21 ஆகஸ்டு 2009 - உயர் நீதிமன்றம், கீழ் கோர்ட்டு உத்தரவின்படி மற்றவர்களுக்கு தண்டனையை தக்க வைத்திருந்தாலும் கூட, ஜெயலலிதா, சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோரை விடுதலை செய்தது.

குறிப்புகள்[தொகு]

  1. "Charges framed against Jaya, 10 others in colour TV scam". Rediff. 14 May 1998. http://www.rediff.com/news/1998/may/14jayatv.htm. பார்த்த நாள்: 3 November 2015. 
  2. "Jayalalitha acquitted in colour TV scam case". Rediff. 30 May 2000. http://www.rediff.com/news/2000/may/30jaya.htm. பார்த்த நாள்: 3 November 2015. 
  3. "SC reprieve for Jaya in colour TV scam". Rediff. 5 May 2000. http://www.rediff.com/news/2000/may/05jaya.htm. பார்த்த நாள்: 3 November 2015.