உள்ளடக்கத்துக்குச் செல்

வணிக அறிவாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணிக அறிவாண்மை(Business Intelligence) என்பது தரவுகள், தகவல்களை முறைப்படுத்தி பயனர்களிடம் கொண்டு சேர்த்து, பயனர்களின் முடிவெடுக்கும் செயற்படும் ஆற்றலை வளப்படுத்த உதவும் நுட்பங்களைக் குறுக்கிறது. இதன் மூலம் வணிகத்தின் இலக்குகளை அடைய வணிக அறிவாண்மை உதவுகிறது. தரவுகளை சேகரித்தல், பகுத்தாய்தல், அறிக்கை தயாரித்தல், எதிர்வுகூறல், பகிர்ந்தல் ஆகியன வணிக அறிவாண்மையின் அடிப்படைக் கூறுகள் ஆகும்.

எ.கா ஒரு கணினி Order processing system ஆகும். இந்த செயலியின் ஊடாக எத்தனை பொருட்கள், யாருக்கு எப்போது விற்கப்பட்டன. யார் கூடிய பெறுமதியான வாடிக்கையாளர்கள். தற்போது எந்த Orderகள் செயற்படுத்தப்பட வேண்டி உள்ளன போன்ற தகவல்களை உடனடியாக பெறக் கூடியதாக இருக்கும். இன்னுமொரு எளிமையான எடுத்துக்காட்டு ஒரு தாபன விக்கியாகும். இந்த விக்கி ஊடாக ஊழியர்கள் தகவல்களை சேகரிக்கவும், பகிரவும் முடியும்.

வரலாறு

[தொகு]

முதன் முதலில் வணிக அறிவாண்மை(Business Intelligence) என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் 1958ல் ஐபிஎம் நிறுவனத்தை சார்ந்த ஆய்வாளர் ஹான்ஸ் பீட்டர் லுஹ்ன் என்பவர் பயன்படுத்தினார். அவர் வேபெர்ஸ்(weber's) அகராதியை மேற்கோள் காட்டி நுண்ணறிவு அல்லது அறிவாண்மை என்பது " உண்மைகளை இடைத்தொடர்புபடுத்தி ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான செயல்பாடு" என்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிக_அறிவாண்மை&oldid=3891661" இலிருந்து மீள்விக்கப்பட்டது