வணிகச் சட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Meaning discounting of bill

ஒப்பந்தச் சட்டம் 1872[தொகு]

அறிமுகம்:
இந்திய ஒப்பந்தச் சட்டம் , 1872 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் நாள் , அமலுக்கு வந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும்.
அனைத்துவிதமான ஒப்பந்தங்கள் பற்றியும் இந்த சட்டம் கூறவில்லை. சில வகை ஒப்பந்தங்கள் வேறு சட்டங்களில் விவாதிக்கப்படுகின்றன.உதாரணமாக கூட்டு வியாபாரம்(PARTNERSHIP ACT), சரக்கு விற்பனை (SALE OF GOODS ACT) ,மாற்று முறை ஆவணச்சட்டம்(NEGOTIABLE INSTUMENTS ACT), அசையா சொத்து மாற்றங்கள் (TRANSFER OF PROPERTY ACT) போன்றவை ஒவ்வொரு விதமான ஒப்பந்தங்கள் பற்றி கூறுகின்றன.
இந்த சட்டம் பெரும்பாலும் ஆங்கிலேய சட்டத்தைப் பின்பற்றி இயற்றப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872, ஒப்பந்தங்களின் பொதுவான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் பற்றி விளக்குகிறது.
இந்த சட்டத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துக்கொள்ளலாம். பிரிவு 1 முதல் பிரிவு 75 வரை , ஒப்பந்தங்களின் பொதுவான அடிப்படை விதிகள் பற்றி பேசப்படுகிறது.பிரிவு 124 முதல் பிரிவு 238 வரை சிலவகை சிறப்பு ஒப்பந்தங்கள் (எ-டு: அடகு, முகவாண்மை (agency) ) பற்றி பேசப்படுகிறது.

வெளி இணைப்பு

கூட்டு வர்த்தகச் சட்டம் 1932[தொகு]

வெளி இணைப்பு

இந்திய நிறுமச் சட்டம் 2013[தொகு]

அறிமுகம்:
இதுவரையில் நடைமுறையில் இருந்த இந்திய நிறுமச் சட்டம் 1956 , முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு ,இந்திய நிறுமச் சட்டம் 2013 அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.உதாரணம் : ஒற்றை நபர் நிறுமம் .

வெளி இணைப்பு

இந்திய நிறுமச் சட்டம்

பொருட்கள் விற்பனைச் சட்டம்[தொகு]

அறிமுகம்[தொகு]

அசையும் /நகரும் சொத்துகளை விற்பது / வாங்குவது குறித்து இந்த சட்டம் கூறுகிறது.இது சரக்கு விற்பனைச் சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்தியாவில் 1930 ஆம் ஆண்டில் இந்த சட்டம் (SALE OF GOODS ACT 1930) இயற்றப்பட்டது.அதற்கு முன்பு , இந்திய ஒப்பந்தங்கள் சட்டத்தின்கீழ் இந்த விஷயங்கள் இருந்தன.இங்கிலாந்து நாட்டின் பொருட்கள் விற்பனைச் சட்டம் 1893 ஐப் பின்பற்றி இந்த சட்டம் இயற்றப்பட்டது.இந்தியாவில் ஜம்மு -காஷ்மீர் மாநிலம் தவிர இதர பகுதிகளுக்கு இந்த சட்டம் பொருந்தும். விற்பது மற்றும் வாங்குவது என்பது மிக எளிமையான பரிவர்த்தனைகள் போலத் தோன்றினாலும் இவற்றால் பல சிக்கல்கள் எழ அதிகமான வாய்ப்புகள் உள்ளன.உதாரணமாக , வாங்குபவரோ அல்லது விற்பவரோ தாங்கள் செய்துகொண்ட ஒப்பன்தத்தின்படி தங்கள் கடமையை நிறைவேற்றத்தவறும்போது தகராறுகள் எழுகின்றன.இவற்றைத்தீர்த்து வைக்கவும் சமரசம் செய்து வைக்கவும் தனி அமைப்புகள் தேவைப்படுகின்றன.எனவே இத்தகைய பிரச்னைகள் எழாவண்ணம் முன்கூட்டியே தடுக்கும் நோக்கத்துடன் இந்த சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.ஜூலை 01, 1930 முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

வரையறைகள்[தொகு]

இந்த சட்டத்தின் பிரிவு 2 , இந்த சட்டத்தில் கூறப்படும் பல்வேறு சொற்களை வரையறுக்கிறது.ஏதேனும் சொற்கள் வரையறுக்கப்படாமல் இருந்தால் இந்திய ஒப்பந்த சட்டம் 1872 இல் உள்ள வரையரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

  1. 1.வாங்குபவர்- ஒரு பொருளை வாங்குபவர் அல்லது வாங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பவர்
  2. 2. வழங்குதல்-
  3. விலை - ஒரு பொருளை விற்பதற்காக ஒருவர் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ள பண மதிப்பு.
  4. பொருட்களின் தரம் என்பது அவை இருக்கும் நிலை அல்லது நிலைமையை உள்ளடக்கியது.
  5. விற்பவர்- ஒரு பொருளை விற்பவர் அல்லது விற்க சம்மதம் தெரிவித்து இருப்பவர்

விற்பனை- பிரிவு 4(2) விற்பனை என்ற சொல்லை வரையறுக்கிறது.

பொருட்கள் - பிரிவு 2(7) பொருட்கள் என்ற சொல்லை வரையறுக்கிறது."பணம் மற்றும் Actionable Claims தவிர்த்த ஏனைய நகரும் சொத்துக்கள் அனைத்துமே பொருட்கள்தான்.வர்த்தக நிறுவனக்களின் பங்களும் பொருட்களே.விற்பனைக்கு முன்பாக பூமியில் இருந்து வெட்டி எடுத்து தர சம்மதிக்கப்பட்ட , நிலத்தில் வளர்ந்துள்ள பயிர்கள்,புல் ஆகியவையும் பொருட்கள்தான்.
பொருட்களின் வகைகள் :

  1. தற்போது உள்ள பொருட்கள் :(Existing Goods)

1.இன்னவை என்று அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்ட பொருட்கள் (Specific Goods)
2.விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டபிறகு இவையாவை என அறுதி செய்யப்படுகின்றன.(Ascertained Goods)
3.வரையறை மட்டும் செய்யப்பட்ட பொருட்கள் .(Generic Goods)

  1. எதிர்காலப் பொருட்கள் ; விற்பவரிடம் தற்போது இல்லத பொருட்கள்.ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு அவர் இவற்றைத்தயாரிக்கலாம் அல்லது வேறு எவரிடமாவது இருந்து வாங்கித்தரலாம்.(Future Goods)
  2. (Contingent Goods)


விற்பனையும் விற்பனைக்கான ஒப்பந்தமும்[தொகு]

விற்பவரின் கடமைகள்[தொகு]

  1. பொருட்களின் மீதுள்ள உரிமையை வாங்குபவருக்கு மாற்றித்தர ஏற்பாடுகளை செய்தல்.
  2. ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி பொருட்களை வழங்க முன்வருதல் (பிரிவு 31)

வாங்குபவரின் கடமைகள்[தொகு]

  1. ஒப்பந்தப்படி பொருட்களை வழங்க விற்பனையாளர் முன்வருகையில் அவற்றை மறுக்காமல் பெற்றுக்கொள்ளல். (பிரிவு 31)
  2. பொருட்களை வாங்கிகொண்டபின் பஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்டபடி அவற்றுக்கான விலையை கொடுத்தல்
  3. பொருட்களை வழங்குமாறு விற்பனையாளரிடம் விண்ணப்பித்தல் (பிரிவு 35)

விற்பவரின் உரிமைகள்[தொகு]

  1. பொருட்களை வழங்குமாறு வாங்குபவர் கேட்டுக்கொண்டபின் பொருட்களை வழங்குதல்(பிரிவு 35)

வாங்குபவரின் உரிமைகள்[தொகு]

  1. ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி பொருட்கள் அவருக்கு வழங்கப்பட (Delivery) வேண்டும் (பிரிவு 31 மற்றும் 32)
  2. பொருட்கள் ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்டபடி இல்லாவிட்டாலோ அல்லது அவற்றின் தரம் அல்லது எண்ணிக்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி இல்லாவிட்டாலோ பொருட்களை வாங்கிகொள்ளாமல் மறுக்கும் உரிமை(பிரிவு 37)
  3. பொருட்களை ஒரே தடவையில் வழங்குவதாக ஒப்பந்தத்தில் கூறிவிட்டு அவற்றை தவணை முறையில் வழங்கினால் பொருட்களை வாங்கிகொள்ளாமல் மறுக்கும் உரிமை(பிரிவு 38)


வாங்குபவர் விழிப்புடன் இருக்கவேண்டும்[தொகு]

வெளி இணைப்பு

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955[தொகு]

வெளி இணைப்பு

நேரடிவரிச் சட்டங்கள்[தொகு]

வருமான வரிச் சட்டம்[தொகு]

அறிமுகம்[தொகு]

ஓர் அரசாங்கம் , மக்களிடமிருந்து பல்வேறு வரிகளின் வாயிலாக திரட்டப்படும் வருமானத்தைக்கொண்டுதான் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.இதுமட்டுமின்றி மக்களுக்குத் தேவையான பொது வசதிகளை உருவாக்குவதும் இந்த வருமானத்தில் இருந்துதான்.அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ் அரசாங்கம் பெற்றுள்ள அதிகாரத்தை ஆதாரமாகக்கொண்டு அரசாங்கம் மக்கள் மீது பலவிதமான வரிகளை விதிக்கிறது.இத்தகைய வரிகளுள் வருமானவரி மிகவும் முக்கியமானதாகும்.இது ஒரு நேரடி வரியாகும்.அதாவது , வரியைச் செலுத்துபவரே அதனால் உண்டாகும் தாக்கத்தையும் அனுபவிக்கிறார்.விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளில், வரியைச் செலுத்துபவர் , அதன் சுமையை வேறு ஒருவரிடம் தள்ளிவிட்டு விடுகிறார்.எடுத்துக்காட்டாக பொருளை விற்கும் வியாபாரி , விற்பனை வரியை தாமே செலுத்தினாலும், அதன் சுமையை விலையில் கூட்டி வாங்குபவர் அல்லது நுகர்பவரிடம் வசூல் செய்துவிடுகிறார்.எனவே இதன் தாக்கம் நுகர்பவர் மீதே விழுகிறது.

வருமான வரியைக் கணக்கிடல்[தொகு]

ஒரு தனி நபர், பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம்.ஒருவருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலப்புகளில் கணக்கிடுகிறார்கள்.

  1. 1.சம்பளம் / ஊதியத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம்
  2. 2.வீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்
  3. 3.வணிகம் அல்லது தொழில் மூலம் ஈட்டப்படும் வருமானம்
  4. 4.மூலதன முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்
  5. 5.இதர வருமானங்கள்
மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்[தொகு]
விலக்கு பெறும் வருமானங்கள்[தொகு]

சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

மறைமுக வரிச் சட்டங்கள்[தொகு]

அறிமுகம்[தொகு]

கலால் வரிச் சட்டம் 1944[தொகு]

அறிமுகம்[தொகு]

வெளி இணைப்பு

சேவை வரி[தொகு]

அறிமுகம்[தொகு]

வரி சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட முனைவர் ராஜா செல்லையா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தியாவில் , முதன்முதலாக, 1994 ஆம் ஆண்டு சூலை முதல் நாள் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களில் வசிப்பவர்கள் , தாங்கள் பெறும் சேவைகளுக்கு ஏற்ப சேவை வரி செலுத்தவேண்டும்.முதலில் மூன்று சேவைகள் மட்டுமே வரி விதிப்புக்கு உள்ளாயின.வரி விகிதம் 5 விழுக்காடாக இருந்தது.பிறகு படிப்படியாக இந்த சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.2012 ஜூலை முதல் எதிமறைப்பட்டியலில் கூறப்பட்டுள்ள சில சேவைகள் தவிர இதர சேவைகள் அனைத்தும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டுவிட்டன.

அரசியல் அதிகாரம்[தொகு]

சட்டத்தின் அங்கீகாரம் இன்றி எந்த அரசும் மக்களிடம் இருந்து எந்த வகையான வரியும் வசூல் செய்யக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 265 கூறுகிறது. அட்டவனை 7 இன் கீழ் மூன்று பட்டியல்கள் உள்ளன. பட்டியல் 1 : நடுவண் அரசின் அதிகாரங்கள் பட்டியல் 2 :மாநில அரசின் அதிகாரங்கள் பட்டியல் 3 :பொதுப் பட்டியல்

வரையறைகள்[தொகு]

எதிர்மறைப் பட்டியல்:=[தொகு]

எந்த எந்த சேவைகளுக்கு வரி கட்ட வேண்டும் என்று தொடக்கத்தில் கூறப்பட்டாலும் தற்போது எதிர்மறைப் பட்டியல் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதின் மூலம் எந்த எந்த சேவைகளுக்கு வரிகட்டவேண்டியதில்லை என்பதை அரசு தெளிவாகக் கூறியுள்ளது.இந்தப் பட்டியலில் இடம் பெற்றவை தவிர மற்ற சேவைகளுக்கு வரிகட்டப்படவேண்டும். (1) அரசாங்கம் மற்றும் லோக்கல் அதாரிட்டி ஆகியவை வழங்கும் (கீழ் காண்பவைதவிர ) சேவைகள்
(2) இந்திய ரிசர்வ் வங்கியின் சேவைகள்
(3) இந்தியாவில் உள்ள வெளினாட்டு அலுவலகங்கள் (Foreign Diplomatic Mission) வழங்கும் சேவைகள்
(4) விவசாயம் தொடர்பான சேவைகள்
(5) பொருள்களின் வர்த்தகம் (வாங்கி விற்றல்)
(6) பொருட்களை தயாரித்தல் அல்லது உற்பத்தி செய்தல்
(7) விளம்பரம் செய்வதற்காக இடம் அல்லது நேரத்தை ஒதுக்குதல்(வானொலி அல்லது தொலைக்காட்சியில் ஒலி /ஒளி பரப்பு செய்யப்படும் விளம்பரங்கள் தவிர)
(8) சாலை அல்லது பாலத்தில் பயணிப்பதற்காக சுங்கக் கட்டணம் வசூலித்தல்
(9) போட்டிப்பந்தயங்கள், சூதாட்டம் மற்றும் லாட்டரி
(10) பொழுதுபோக்கு மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கு அனுமதித்தல்
(11) மின்சார வினியோகம் மற்றும் பகிர்மானம்
(12) கல்விச் சேவைகள்
(13) மக்கள் குடியிருப்பதற்காக குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு விடுதல்
(14) பண வைப்புகள் , கடன்கள் அல்லது முன்பணம் வழங்குதல் ( வட்டி அல்லது தள்ளுபடி பெறும் நோக்கத்துடன்) வங்கிகள் தங்களுக்குள்ளகவோ அல்லது அந்நிய செலவாணி டீலர்கள் தங்களுக்குள்ளாகவோ அல்லது வங்கிகளும் டீலர்களும் தங்களுக்குள்ளாகவோ அந்நிய செலாவணியை வாங்குதலும் விற்றலும்.
(15) பிரயாணிகளை அவர்களுடைய உடைமைகளுடனோ அல்லது இல்லாமல் தனியாகவோ அழை த்து செல்லுதல் (கீழ் காண்பவை தவிர )
(16) பொருட்களை சுமந்து செல்லுதல்(கீழ் காண்பவை தவிர )
(17) இறுதிச்சடங்கு , இடுகாட்டுச் சேவைகள்

சேவை வரியை சேவையை வழங்குபவர்தான் (Service Provider) கட்ட வேண்டும் என்பது அறிமுக காலத்தில் கூறப்பட்டது.ஆனால் தற்போது உள்ள நடைமுறையின்படி சேவை வரியை சேவையை வழங்குபவர் அல்லது சேவையைப் பெறுபவர்(Service Recipient) அல்லது இருவரும் இணைந்தும் கட்டலாம். இதற்கு "Reverse Charge Mechanism" என்று பெயர்.

விற்பனை வரிச் சட்டம்[தொகு]

அறிமுகம்[தொகு]

விற்பனை வரியைப் பொருத்தவரை, ஒரு மாநிலத்துக்குள் நடைபெறும் விற்பனைகளை அந்த அந்த மாநில அரசின் விற்பனைவரிசட்டங்களும் மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனை போன்ற விஷயங்களை மத்திய விற்பனை வரிச் சட்டமும் கட்டுப்படுத்துகின்றன.

வெளி இணைப்பு

சுங்க வரிச் சட்டம் 1962[தொகு]

அறிமுகம்[தொகு]

வெளி இணைப்பு

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986[தொகு]

அறிமுகம்[தொகு]

வெளி இணைப்பு

மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881[தொகு]

அறிமுகம்[தொகு]

மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881(Negotiablae Instruments Act 1881 ) என்ற சொற்றொடரில் "Negotiable " என்ற சொல்லுக்கு மாற்றத்தக்கது (அதாவது ஒருவர் பெயரில் இருந்து இன்னொருவருக்கு மாற்றத்தக்கது) என்றும் "Instrument " என்பதற்கு "ஒருவருக்கு ஆதரவாக ஓர் உரிமையை உருவாக்கும் வகையில் எழுதப்பட்ட ஓர் ஆவணம்" என்றும் பொருள் கூறலாம். காசோலை (Cheque) , உண்டியல் (Bill) , கடன் பத்திரம்(Promissory Note) போன்றவை மாற்றுமுறை ஆவணங்கள் ஆகும்.

அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999[தொகு]

அறிமுகம்[தொகு]

வெளி இணைப்பு

அன்னிய நன்கொடைகள் (நெறிப்படுத்தும்) சட்டம் 2010[தொகு]

அறிமுகம்[தொகு]

வெளி இணைப்பு

போட்டிகள் சட்டம் 2002[தொகு]

அறிமுகம்[தொகு]

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிகச்_சட்டங்கள்&oldid=3486824" இலிருந்து மீள்விக்கப்பட்டது