வட, மத்திய அமெரிக்கா, கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக்கோப்பை
தோற்றம் | செப்டம்பர் 18, 1961[1] |
---|---|
மண்டலம் | வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, கரிபியன் (வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு) |
அணிகளின் எண்ணிக்கை | 12 |
தற்போதைய வாகையாளர் | ![]() |
அதிக முறை வென்ற அணி | ![]() |
இணையதளம் | www.goldcup.org |
![]() |
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக்கோப்பை அல்லது கான்காகேப் தங்கக்கோப்பை (CONCACAF Gold Cup, எசுப்பானியம்: Copa de Oro de la CONCACAF) (பிரெஞ்சு மொழி: Coupe D'or du CONCACAF) கான்காகேப் கட்டுப்பாட்டில் உள்ள ஆடவர் தேசிய காற்பந்து அணிகளுக்கு இடையேயான முதன்மை சங்கக் கால்பந்து போட்டியாகும்.
இந்தத் தங்கக் கோப்பை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. 2015க்கு முன்பு தங்கக்கோப்பை போட்டியும் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியும் ஒரே ஆண்டில் நடைபெறாவிட்டால், கான்காகேப்,பிபா இரண்டிலும் உறுபின்னராக உள்ள, வெற்றியாளரோ அடுத்த நிலையில் உள்ள அணியோ அடுத்த கூட்டமைப்புகளின் போட்டியில் பங்கேற்கும். 2015 முதல் இரண்டு அடுத்தடுத்த தங்கக்கோப்பை வெற்றியாளர்களிடையே (காட்டாக 2013, 2015 போட்டிகளில் வென்றவர்கள்) முடிவுறு போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்கள் கூட்டமைப்புகளின் போட்டிக்குத் தகுதி பெறுவர். ஒரே அணி அடுத்தடுத்து வென்றிருந்தால் முடிவுறு போட்டியின்றி அந்த அணி கூட்டமைப்புகளின் போட்டிக்குத் தகுதி பெறும்.[2]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Castro, Rodrigo A. Calvo (6 April 2012). "Costa Rica wins 1963 NORCECA title". CONCACAF.com. 9 April 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2013, 2015 CONCACAF Gold Cup winners will play one-off match for 2017 Confederations Cup berth". MLS Soccer. April 5, 2013. Archived from the original on ஜனவரி 7, 2014. https://web.archive.org/web/20140107173936/http://www.mlssoccer.com/news/article/2013/04/05/2013-2015-concacaf-gold-cup-winners-will-play-one-match-2017-confederations-. பார்த்த நாள்: November 10, 2013.