வடுகப்பட்டி (நாமக்கல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடுகப்பட்டி: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றூர் இது. நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் வலையப்பட்டி உள்ளது. அங்கிருந்து இரண்டு கல் தொலைவில் வடுகப்பட்டி அமைந்திருக்கிறது. பொதுவாக நாயக்கர் சாதியினரை வடுகர் எனவும் அழைக்கும் வழக்கு தமிழில் உள்ளது. இவ்வூரில் கவரா நாயக்கர் என்னும் சாதியினர் மிகுதியாக வசிக்கின்றனர். ஆகவே அந்த அடிப்படையில் வடுகர் என்னும் சிறப்புக் கூறையும் பட்டி என்னும் பொதுக்கூறையும் கொண்டு இவ்வூர்ப் பெயர் உருவாகியுள்ளது. கவரா நாயக்கர், உடையார், முத்துராஜா, அருந்ததியர், குறும்பக் கவுண்டர் ஆகிய சாதியினர் மிகுதியாக வசிக்கின்றனர். இங்கு முதன்மைத் தொழில் உழவு. இவ்வூரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. மாரியம்மன், கருப்பண்ணன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் இங்குச் சிறப்புப் பெற்றவை. இவ்வூரில் முருகன் கரடு என்னும் குன்று உள்ளது. அதில் முருகன் கோயில் அமைந்துள்ளது. அங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுகப்பட்டி_(நாமக்கல்)&oldid=2939928" இலிருந்து மீள்விக்கப்பட்டது