வடிவவியத் திறனாய்வு
Appearance
இலக்கியத்தில் வடிவவியத் திறனாய்வு அல்லது உருவவியத் திறனாய்வு என்பது, வடிவவியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு ஆகும். ஒரு படைப்பின் பல்வேறு உறுப்புக்களின் ஒன்றிணைந்த ஒரு முழுமையே வடிவம் என்பது வடிவவியற் கொள்கையின் அடிப்படையாக உள்ளது.[1] தனித்தனியே கலைப் படைப்பு என்று சொல்ல முடியாத பல விடயங்கள் ஒரு குறித்த வகையில் ஒன்றாக இணைந்து செயற்பட்டு முழுமை ஆகும் போதே கலைப் படைப்பு உருவாகிறது என்கிறது வடிவவியல். இக்கொள்கையைப் பொறுத்தவரை இலக்கியமும் வடிவமும் ஒன்றே. இலக்கியத்தை ஆராயும்போது, வடிவவியல் அவ்விலக்கியத்தின் படைப்பாளியைப் பற்றியோ, அவரின் பின்புலம் பற்றியோ கவனத்தில் கொள்வதில்லை.
குறிப்புக்கள்
[தொகு]- ↑ நடராசன், தி. சு., 2009. பக். 121.
உசாத்துணைகள்
[தொகு]- பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
- நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).