வடிகால் புழை
Appearance
வடிகால் புழை அல்லது ஆசுகுலம் (Osculum)(பன்மை "ஆசுகுலா") என்பது பஞ்சுயிரிகளில் உள்ள நீர் வெளியேற்ற அமைப்பாகும். இது வெளியில் ஒரு பெரிய திறப்பு போன்று காணப்படும். இதன் மூலம் நீரானது புழையுடலி குழியிலிருந்து வெளியேறுகிறது. புழையுடலியின் கழிவுகள் வெளியேறும் தண்ணீர் மூலம் அகற்றப்படுகிறது. பஞ்சுயிரியின் கழிவுகள் ஆசுகுலம் வழியாக வெளியேறும் நீரில் அனுப்பப்படுகிறது. பஞ்சுயிரிகள் அதிக அளவு தண்ணீரை வெளியேற்றுகின்றன. பொதுவாக பஞ்சுயிரியின் உடல் அளவிற்குச் சமமான நீர் அளவு ஒவ்வொரு ஐந்து வினாடிக்கும் வெளியேற்றப்படுகிறது. சவ்வூடுகளின் அளவு சுருங்கும் மயோசைட்டுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் அளவு, பஞ்சுயிரி வழியாகச் செல்லும் நீரின் அளவை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும். தண்ணீரில் அதிகப்படியான வண்டல் காணப்பட்டால் வடிகால் புழை முழுமையாக மூடப்படும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Invertebrate Zoology, 7th edition. Cengage Learning. pp. 79–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-315-0104-7.