வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் என்பது இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். இத்திட்டம் இலங்கையின் 2009 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.[1] இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைக்கப்பட்ட அதிபரின் செயற்குழுவின் தலைவராக பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டார்[2].

கட்டங்கள்[தொகு]

இவ்வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசின் வருமானத்துறை அமைச்சர் இரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.[3] முதற்கட்டமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான கட்டாயத்தேவைகளை பெற்றுக் கொடுத்தலும் மீள் குடியேற்றலும் (180 நாள் துரித திட்டம்) இரண்டாம கட்டமாக வடக்கின் உட்கட்டமைப்புகளை செப்பனிடலும் (இடைக்கால திட்டங்கள்) மூன்றாம் கட்டமாக தொழிற்துறை அபிவிருத்தி திட்டங்களும் (நீண்டகால திட்டங்கள்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டத்தின் போது மக்களாட்சியை நிலைநாட்டும் வேலைகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. கே. அசோக்குமார்; விசு கருணாநிதி (2008-11-07). "வட பகுதியை மீள கட்டியெழுப்ப வடக்கின் வசந்தம் செயற்திட்டம்" (in தமிழ்). தினகரன் (இலங்கை) (அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்). http://www.thinakaran.lk/2008/11/07/_art.asp?fn=n0811075. பார்த்த நாள்: 2009-07-06. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 YATAWARA, Dhaneshi (2009-07-05). "Uthuru Wasanthaya heralds new era for North" (in ஆங்கிலம்). சண்டே ஒப்சேவர் (அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்) இம் மூலத்தில் இருந்து 2009-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090709114526/http://www.sundayobserver.lk/2009/07/05/fea30.asp. பார்த்த நாள்: 2009-07-06. 
  3. 3.0 3.1 "வடக்கின் வசந்தம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும்" (in தமிழ்). தினகரன் (இலங்கை) (அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்). 2009-05-03 இம் மூலத்தில் இருந்து 2009-05-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090507164749/http://www.thinakaran.lk/vaaramanjari/2009/05/03/?fn=p0905032. பார்த்த நாள்: 2009-07-06. 

வெளி இணைப்புகள்[தொகு]