வஜ்ராய் அருவி

ஆள்கூறுகள்: 17°42′32″N 73°48′54″E / 17.709°N 73.815°E / 17.709; 73.815
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வஜ்ராய் அருவி (Vajrai Waterfall) என்பது இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்தில் ஊர்மோதி ஆற்றில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். இது மகாராட்டிராவின் சாத்தாரா நகரத்திலிருந்து தோராயமாக 27 கிலோமீட்டர்கள் (17 mi) [1] தொலைவில் பம்பாவ்லி [2] மற்றும் சகாயாத்ரி மலைக் கிராமத்திற்கு அருகில் உள்ளது.[1] மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த அருவியின் மொத்த நீர்வீழ்ச்சியின் உயரம் 560 மீட்டர்கள் (1,840 அடி) ஆகும்.[2] மேகாலயாவில் உள்ள நோஹ்கலிகை அருவியினை அடுத்து 335 மீட்டர்கள் (1,099 அடி) நீர் வீழ்ச்சி கொண்ட இந்த அருவி இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த அருவியாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Top things to do in Satara - Vajrai Waterfall". The Indian Trip. பார்க்கப்பட்ட நாள் 2020-10-28.
  2. 2.0 2.1 "Bhambavli Vajrai Waterfall". District Administration Satara. பார்க்கப்பட்ட நாள் 2020-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜ்ராய்_அருவி&oldid=3783881" இலிருந்து மீள்விக்கப்பட்டது