வங்காளதேச மகிளா பரிசத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளதேச மகிளா பரிசத் ( Bangladesh Mahila Parishad ) என்பது பெண்களுக்கான மனித உரிமைகள் அமைப்பாகும்.[1] இது 4 ஏப்ரல் 1970 இல் நிறுவப்பட்டது. விடுதலைப் போருக்குப் பிறகு, 1976 இல் சுதந்திர வங்காளதேசத்தில் சமூகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.[2][3] இதற்கு நோர்வே ஆதரவு அளிக்கிறது. இந்த அமைப்பைப் போன்றே இந்தியப் பெண்களின் தேசிய கூட்டமைப்புக்கு முன்னோடியாக வங்காளதேசத்தில் மகிளா ஆத்ம ரக்சா சமிதி ( மார்ஸ் எனவும் அறியப்படுகிறது) 1942 உருவாக்கப்பட்டது.

பின்னணி[தொகு]

வங்காளதேச மகிளா பரிஷத் 4 ஏப்ரல் 1970 இல் கிழக்கு பாக்கித்தான் மகிளா பரிஷத் என்ற பெயரில் சூஃபியா கமல் என்பவரால் நிறுவப்பட்டது.[4] இதன் முதல் பொதுச் செயலாளராக மலேகா பேகம் என்பவர் இருந்தார்.[4] இந்த அமைப்பு 1969 கிழக்கு பாக்கித்தானின் பொதுமக்களின் எழுச்சியின் போது உருவாக்கப்பட்டது. இது பாக்கித்தானின் குடியரசுத் தலைவர் அயூப் கான் பதவி விலக செய்ய வழிவகுத்தது. இதன் நிறுவனர்கள் 1971 இல் வங்காளதேச விடுதலைப் போரை ஆதரித்தனர்.[5][4] வங்காளதேசத்தின் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த அமைப்பு வங்காளதேச மகிளா பரிஷத் என மறுபெயரிடப்பட்டது.[6]

வங்காளதேச மகிளா பரிஷத் 1972 இல் வங்காளதேச அரசிடம் பரம்பரைச் சட்டங்களை மாற்றவும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு எண்ணிக்கையை அதிகரிக்கவும் கோரியது. [6] மேலும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு நேரடித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொண்டது.[6] இது 1976 இல் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையில் உறுப்பினராக உள்ளது.[6] 1976 முதல் 1977 வரை, வங்காளதேசத்தில் வரதட்சணை நடைமுறைக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டது.[6]

1985 ஆம் ஆண்டில், வங்காளதேசமகிளா பரிஷத் ரோகியா சதன் என்ற பெண்கள் தங்குமிடத்தை நிறுவியது.[6] பின்னர், ரோகியா சதன் என்ற குடியிருப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிருஷ்டி என்ற நிறுவனத்தை நிறுவியது.[6] வங்காளதேச மகிளா பரிஷத் குடும்ப நீதிமன்றங்கள் ஆணை, 1985 மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடக்குமுறை தடுப்புச் சட்டம், 2000 ஆகியவற்றிற்காக பிரச்சாரம் செய்தது.[6] இது 134 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[6] இது பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.[6] கெய்ரோ பிரகடனத்தின் இலக்குகளை நிறைவேற்ற உழைக்கவும் உறுதியளித்தது.[6]

வங்காளதேச மகிளா பரிஷத்தின் தலைவர் ஆயிஷா கானம் ஜனவரி 2021 இல் இறந்ததையடுத்து,[7] பிப்ரவரி 2021 இல், டாக்டர் பௌசியா முஸ்லம் இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேகா பானு பொதுச் செயலாளராக இருந்தார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sobhan, Prof Rehman (2014-04-17). "Role of Mahila Parishad". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-03.
  2. "Bangladesh Mahila Parishad (BMP) – Bangladesh Mahila Parishad". mahilaparishad.org. Archived from the original on 2019-11-06. பார்க்கப்பட்ட நாள் 2019-11-25.
  3. Purkayastha, Nibedita Das (2012). "Bangladesh Mahila Parishad". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Bangladesh_Mahila_Parishad. 
  4. 4.0 4.1 4.2 Hoque, Mofidul (2020-04-04). "Looking back at the 50 years of Bangladesh Mahila Parishad". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-03.
  5. Purkayastha, Nibedita Das (2012). "Bangladesh Mahila Parishad". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Bangladesh_Mahila_Parishad. 
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 . 
  7. "Bangladesh Mahila Parishad President Ayesha Khanam no more". The Daily Star (in ஆங்கிலம்). 2021-01-02. பார்க்கப்பட்ட நாள் 2023-04-03.
  8. "Fauzia Moslem new president of Bangladesh Mahila Parishad". The Daily Star (in ஆங்கிலம்). 2021-02-07. பார்க்கப்பட்ட நாள் 2023-04-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_மகிளா_பரிசத்&oldid=3888497" இலிருந்து மீள்விக்கப்பட்டது