வங்காளதேசக் கொடி
![]() | |
பிற பெயர்கள் | சிவப்புப் பச்சை (வங்காள: লাল-সবুজ) |
---|---|
பயன்பாட்டு முறை | தேசியக் கொடி ![]() ![]() |
அளவு | 3:5 |
ஏற்கப்பட்டது | 17 சனவரி 1972 |
வடிவம் | பசும் களத்தில் சிவப்பு வட்டம். |
![]() | |
வங்காளதேசத்தின் குடிசார் கப்பற்கொடி | |
வடிவம் | வங்காளதேசக் கொடியை இடது மேற்புறத்தில் அமைத்துள்ள சிவப்புக் கொடி. |
![]() | |
வங்காளதேசத்தின் கடற்படை கப்பற்கொடி | |
வடிவம் | வங்காளதேசக் கொடியை இடது மேற்புறத்தில் அமைத்துள்ள வெள்ளைக் கொடி. |
![]() | |
விடுதலைப் போரின் போது பயன்படுத்தியக் கொடி (1971) | |
ஏற்கப்பட்டது | 2 மார்ச் 1971 |
வடிவம் | பசும் களத்தில் சிவப்பு வட்டத்தினுள் மஞ்சள் வங்காளதேச நிலப்படத்தைக் கொண்டது. |
வங்களாதேசக் கொடி (வங்காள: বাংলাদেশের জাতীয় পতাকা) அலுவல்முறையாக சனவரி 17, 1972இல் ஏற்கப்பட்டது. இது பச்சை வண்ணப் பின்னணியில் சிவப்பு வட்டத்துடன் காணப்படுகின்றது. சிவப்பு வட்டம் கொடி பறக்கும்போது கொடியின் மையத்தில் இருக்குமாறு சிறிதே கொடிக்கம்பம் பக்கமாக உள்ளது. சிவப்பு வட்டம் வங்காளத்தில் சூரியன் உதிப்பதைக் குறிக்கின்றது; தவிரவும் நாட்டு விடுதலைக்காக உயிர்துறந்தோரின் குருதியையும் குறிக்கின்றது. பச்சை வண்ணம் வங்காளதேசத்தின் பசுமையான நிலப்பரப்பைக் குறிக்கின்றது.
இந்தக் கொடி 1971 வங்காளதேச விடுதலைப் போரில் பயன்படுத்தப்பட்டக் கொடியை ஒத்துள்ளது. அந்தக் கொடியில் சிவப்பு வட்டத்தினுள் வங்காளதேசத்தின் நிலப்படம் இருந்தது. 1972இல் இந்த நிலப்படம் நீக்கப்பட்டது. வங்காளதேச நிலப்படத்தை இருபுறமும் சரியாக காட்டப்படுவதில் இருந்த சிக்கலைத் தவிர்க்கவே வடிவமைப்பு மாற்றப்பட்டது.[1][2]
குடிசார் கப்பற்கொடியும் கடற்படை கப்பற்கொடியும் முறையே சிவப்பு அல்லது வெள்ளைப் பின்னணியில் தேசியக் கொடியை இடப்புற மேல்மூலைச் சதுரத்தில் (canton) கொண்டுள்ளன.
உலக சாதனை[தொகு]
திசம்பர் 16, 2013 அன்று 42ஆவது வங்காளதேச வெற்றி நாள் கொண்ட்டாடங்களின்போது டாக்காவிலுள்ள சேர்-இ=பங்களா நகரில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் 27,117 மக்கள் கூடி "மனிதக் கொடி"யை உருவாக்கினர்; இதனை உலகின் மிகப்பெரும் மனித தேசியக் கொடியாக கின்னஸ் உலக சாதனைகள் பதிவு செய்துள்ளது.[3][4][5]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Flag of Bangladesh, Flags of the World.
- ↑ "Lonely Planet: Bangladesh", 4th Edition, Lonely Planet Publications, (December 2000), ISBN 0-86442-667-4.
- ↑ http://bdnews24.com/bangladesh/2014/01/04/bangladeshs-human-flag-in-guinness-world-records
- ↑ http://www.banglamail24.com/english/index.php?view=details&news_type_id=1&menu_id=3&news_id=13262
- ↑ http://bdnews24.com/bangladesh/2013/12/16/world-largest-human-flag