வங்கபாண்டு உஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீமதி.வங்கபண்டு உஷா மாண்புமிகு ஆந்திர ஆளுநருடன்

வாங்கபண்டு உஷா ஒரு தெலுங்கு மொழி குறுங்கவிதாயினி ஆவார். மேலும் இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கலாச்சார பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.[1] நாட்டுப்புற பாடல்கள், குறுங்கவிதைகள் மற்றும் நடனங்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ள இவரை, ஆந்திர மாநில அரசு சமீபத்தில் ஆந்திர மாநில படைப்பாற்றல் மற்றும் கலாச்சார ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது.

இவரின் தந்தையான வாங்கபண்டு பிரசாத ராவும் தெலுங்கு மொழியில் பிரபலமான பல்லவிக்கவிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளரே.[2] அவரை பின்பற்றி உத்தராந்திரா நாட்டுப்புற பாணியில் பல்வேறு பாடல்களையும், கவிதைகளையும் பாடி தெலுங்கு இலக்கியத்திற்கு உஷாவும் பணியாற்றியுள்ளார்.

வங்கபாண்டு உஷா நியமன உத்தரவு நகல்

ஆரம்பத்தில் இடதுசாரி அமைப்புகளில் தீவிரமாக இருந்தாலும்  2011ம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.[3] ஆந்திர அரசின் கலாச்சார அலுவல்கள் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வங்கபாண்டு உஷா, அரசு நிகழ்ச்சிகளிலும், கலாச்சார நிகழ்ச்சிகளிலும், அவருக்கே உரிய பாணியில் (உத்தராந்திரா நாட்டுப்புற பாணி) பாடல்களை பாடி மக்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archive News". தி இந்து. 2010-12-22. Archived from the original on 2011-11-08. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "Archived copy". hindu.com. Archived from the original on 5 November 2012. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "YSRCP dharna against power cuts turns violent - Sakshi Post". Archive.is. Archived from the original on 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கபாண்டு_உஷா&oldid=3741896" இலிருந்து மீள்விக்கப்பட்டது