லோஹானி குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லோஹானி குகைகள் என்பது இந்தியாவின் தென்மேற்கு மத்தியப் பகுதியில், கைவிடப்பட்ட மாண்டு களத்திற்கு அருகில் காணப்படும், பாறையில் வெட்டப்பட்ட குகைகள் மற்றும் கோவில்கள் ஆகும்.. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் வாயிலாக இவைகள் கிபி 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆய்வில் சிவன், பார்வதி, விஷ்ணு மற்றும் லட்சுமி ஆகிய இந்து சமய சிலைகள் மற்றும் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இக்குகைக் கோவில்கள் அநேகமாக சைவ சமய மரபைச் சேர்ந்த இந்து மடங்களாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1][2] 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட இஸ்லாமிய நினைவுச்சின்னங்கள் இதன் அருகில் உள்ளன.

இந்து மற்றும் முஸ்லீம் நினைவுச்சின்னங்களின் தொகுதி, மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டம், மாண்டுவிலிருந்து 300 கிலோமீட்டர்கள் (190 மை) தொலைவில், போபாலுக்கு தென்மேற்கே அமைந்துள்ளது. இது  யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. [3] இது N-MP-90 குறியீட்டுடன் இந்தியாவின் தேசிய முக்கியத்துவத்தின் நினைவுச்சின்னங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lohani caves Archaeological Survey of India, Bhopal
  2. Kailash Chand Jain (1972). Malwa Through The Ages. Motilal Banarsidass. pp. 454–455. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0824-9.
  3. Group of Monuments at Mandu, Madhya Pradesh, UNESCO
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோஹானி_குகைகள்&oldid=3417483" இலிருந்து மீள்விக்கப்பட்டது