லைஃப் இஸ் பியூட்டிஃபுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லைஃப் இஸ் பியூட்டிபுல்
இயக்கம்ரோபேர்ட்டோ பெனிக்னி
தயாரிப்புஜெயின்லுகி பிராச்சி,
ஜான் எம்.டேவிஸ்,
எல்டா பெர்ரி
கதைரோபேர்ட்டோ பெனிக்னி,
வின்சென்சோ செரமி
நடிப்புரோபேர்ட்டோ பெனிக்னி,
நிகொலட்டா பிராச்சி,
குயிஸ்தினோ டுரானோ
விநியோகம்மிராமேக்ஸ் பில்ம்ஸ் (அமெரிக்கா)
வெளியீடு20 டிசம்பர் 1997
23 அக்டோபர், 1998 (அமெரிக்கா)
ஓட்டம்116 நிமிடங்கள்
மொழிஇத்தாலியன், ஜெர்மன், ஆங்கிலம்

வாழ்க்கை அழகானது (இத்தாலிய மொழி: La vita è bella, Life is beautiful) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும். இருப்பினும் ஆஸ்கார் விருதுகள் பிரிவில் பலவற்றிற்கும் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த வேற்று மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதையும், சிறந்த இசையமைப்பு, சிறந்த நடிகர் போன்றவற்றிற்கான ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.

வகை[தொகு]

நாடகப்படம் / நகைச்சுவைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கதையின் ஆரம்பத்தில் யூதரான கைடோ டோரா (ரோபேர்ட்டோ பெனிக்னி) தனது குறும்புத்தனமான விளையாட்டுகளால் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கின்றார். நகைச்சுவை உணர்வுகளால் பிரதிபலிக்கும் இவர், பிறப்பால் யூதர் எனும் காரணத்துக்காக, தனது மகனான ஜோஷுவாவுடன் ஜேர்மனிய நாசிப்படைகளால், சிறைக்கு அனுப்பப்படுகின்றார். ஜோஷுவாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஆயத்தம் செய்யும் போது ஏற்படும் இந்நிகழ்வு பின்னர் அவர்களின் அழிவிற்கே என ஆரம்பத்தில் அறிந்து கொள்ளும் கைடோ தனது மகனிடம், "நாம் இப்பொழுது ஒரு விளையாட்டு விளையாடுகின்றோம் எனவும் மேலும் இச்சிறை மற்றும் அனைத்து காவலர்களும் ஒரு விளையாட்டே எனக் கூறுகின்றார்". மேலும் "ஒவ்வொரு காவலரும் தங்களிடம் கோபமாக உள்ளனர், ஏனெனில் அவர்களுக்கு வேண்டியதெல்லம் பீரங்கிதான், அப்பீரங்கிதான் நம்மிடம் வரப்போகின்றது என்னென்றால், யார் அதிகமாக புள்ளிகளை இவ்விளையாட்டில் பெறுகின்றாரோ அவருக்கே அப்பீரங்கி சொந்தமாகும்" எனவும் கூறிக்கொள்கின்றார் கைடோ. ஒரு கட்டத்தில் நேசப்படைகளால் ஜெர்மானிய படைகள் தாக்கப்படுகின்றன. அப்போது நடக்கும் குழப்பதில் தனது மனைவியைக் கைடோ காண முற்படும் பொது அவர் கொல்லப்படுகின்றார். இறுதியில் ஜோஷுவா தனது அம்மாவிடம் சேருகிறான். ஜோஷுவா தனது தந்தை தனக்காக செய்த தியாகத்தை சொல்லுவதோடு இத்திரைப்படம் முற்றுகிறது.