லெட்டோவிசைட்டு
Appearance
லெட்டோவிசைட்டு (Letovicite) என்பது ஓர் அமோனியம் சல்பேட்டு கனிமம் ஆகும். (NH4)3H(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இக்கனிமம் விவரிக்கப்படுகிறது. ஐயுபிஏசி முறை லெட்டோவிசைட்டை டிரையமோனியம் சல்பேட்டு ஐதரசன் சல்பேட்டு என்று குறிப்பிடுகிறது. நிக்கல் சிடரன்சு வகைபாடு 07.ஏடி.20 என்று வகைப்படுத்துகிறது.
கழிவு நிலக்கரி குவியல்கள் எரியும் போது வெள்ளை நிறத்தில் ஒற்றை சரிவச்சுடன் இரண்டாம் நிலை கனிமமாகவும். வெந்நீரூற்றுகளில் படிவுகளாகவும் இக்கனிமம் அரிதாக தோன்றுகிறது. 1932 ஆம் ஆண்டு மொராவியாவின் லெட்டோவைசு மண்டலத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- Letovicite
- Letovicite Mineral Data
- Letovicite பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்
- Letovicite