லெக்கார்ன் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லெக்கார்ன் கோழி மற்றும் சேவல்

லெக்கார்ன் கோழி ( Leghorn இத்தாலிய மொழி: Livorno or Livornese) என்பது ஒரு கோழி இனமாகும். இந்தக் கோழி இனம் நடு இத்தாலியில் தோன்றியது ஆகும். இக்கோழிகள் முதலில் 1828 ஆம் ஆண்டு வட அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அமெரிக்காவிலிருந்து 1870 ஆம் ஆண்டு பிரிட்டனில் இக்கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[1] வெள்ளை லெக்கார்ன் கோழிகளையே உலகின் பல நாடுகளில் வளர்க்கின்றனர். லெக்கார்ன் கோழிகளில் வெள்ளை லெக்கார்ன் தவிர்த்து வேறுபல வகைகள் இருந்தாலும் அவை குறைவான அளவே உள்ளன.

விளக்கம்[தொகு]

வெள்ளை லெக்கார்ன் கோழிகளின் கால்கள் வெளிரிய மஞ்சள் நிறத்திலும், குறுகலாகவும், கனத்தும் இருக்கும். இவற்றின் கால் விரல்களும் குறுகியவை. இதனால் இக்கோழிகளால் சரிவர நடக்க இயலாது. கனத்த தேகம் உள்ளவர்கள் போல காலை அகட்டி வைத்து அசைந்து அசைந்து நடக்கும். இவற்றின் கொண்டை இரத்த சிவப்பு நிறமுடையதாக இருக்கும். இவற்றின் உடல் முழுவதும் வெள்ளை நிற பளபளக்கும் இறகுகள் அடர்ந்திருக்கும். இக்கோழிகள் ஆண்டுக்கு சராசரியாக 280 முட்டைகள் வரை இடும் சிலசமயம் 300–320 வரை கூடுதலாகவும் முட்டை இடும். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெக்கார்ன்_கோழி&oldid=2167014" இருந்து மீள்விக்கப்பட்டது