லூமியேர்-பார்பியர் முறை
Appearance
லூமியேர்-பார்பியர் முறை (Lumière–Barbier method) என்பது நீரிய கரைசல்களில் அரோமாட்டிக் அமீன்களை அசிட்டைலேற்றம் செய்யக்கூடிய ஒரு வினையாகும். அனிலினின் அசிட்டைலேற்ற வினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம் [1]. ஒரு சமான ஐதரோகுளோரிக் அமிலம் கலந்த நீரைப் பயன்படுத்தி அனிலின் முதலில் கரைத்துக் கொள்ளப்படுகிறது.
பின்னர் 1.2 சமான அளவு அசிட்டிக் நீரிலி இக்கரைசலுடன் சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து கரைசலுடன் அதே 1.2 சமான அளவு சோடியம் அசிட்டேட்டு கரைசலும் சேர்க்கப்படுகிறது. அனிலின் அசிட்டிக் நீரிலையைத் தாக்குகிறது. அமோனியம் அயனி புரோட்டான் நீக்கம் அடைகிறது.
பின்னர் அசிட்டேட்டு ஓர் விடுபடும் குழுவாகச் செயல்படுகிறது.
அசிட்டனிலைடு விளைபொருள் நீரில் கரையாது. எனவே இதை வடிகட்டி படிகங்களாகப் பெறலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clayden; Greeves; Warren (2001). Organic chemistry. Oxford university press. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-850346-0.