லூடுலோ, கொலராடோ
லூடுலோ (Ludlow) என்பது அமெரிக்கக் கூட்டு நாட்டில், கொலராடோ மாநிலத்தில் லாசு ஆனிமாசு வட்டத்தில் (கவுன்ட்டியில்) உள்ள மக்களற்ற ஊர் (ghost town). இவ்வூர், 1914 ஆம் ஆண்டில் நிகழ்ந்த படுகொலையால் வரலாற்றுப் பெயர் பெற்றது. இவ்வூர் சாங்கிரே டி கிறிசிட்டோ மலைகள்சாங்கிரே டி கிறிசிட்டோ மலைகளின் (Sangre de Cristo Mountains) அடிவராத்தில் அமைந்துள்ளது. இவ்வூரில் 11 குழந்தைகள் உட்பட, நிலக்கரி சுரங்கத்தொழிலாளிகள் உட்பட 20 பேர் கொலராடோ நேசனல் கார்டுகளால் (Colorado National Guards)படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட இடம் சனவரி 16, 2009 அன்று இறந்த சுரங்கத்தொழிலாளிகளின் நினைவாக நாட்டு வரலாற்று அடையாளக்குறிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, சூன் 28, 2009 அன்று நிறுவப்பட்டது. [1]
லூடுலோ, அமெரிக்கக் கூட்டு நாடுகளின் மாநிலங்களின் ஊடே செல்லும் நெடுஞ்சாலை 25 இல் கொலராடோவில் உள்ள டிரினிடாடு (Trinidad) என்னும் ஊருக்கு 19 கி.மீ (12 மைல்)) மேற்கே அமைந்துள்ள ஊர்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ McPhee, Mike. "Mining Strike Site in Ludlow Gets Feds' Nod." Denver Post. June 28, 2009.