லுப்னா அல்-ஹுசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லுப்னா அஹ்மத் அல்-ஹுசைன் ஒரு சூடானிய ஊடகவியலாளரும் சமூகப் போராளியும் ஆவார். சூலை 2009 இல் இவர் நீள்காற்சட்டை அணிந்தற்கான சூடானில் கைது செய்யப்பட்டார். பெண்கள் சூடானிய கலாச்சாரத்துக்கு அல்லது பொது உணர்வுக்கு எதிராகச் செயற்படுவது குற்றம் என்ற 192 தொகுதியின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டம் படி இவருக்கு 40 சவுக்கடிகள் வழங்கப்பட்டிருக்கும். எனினும் பல பெண்ணியவாதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்றோரிடம் இருந்து எழுந்த எதிர்ப்பும் காரணமாக இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை இவர் கட்ட மறுத்தால் சிறைத் தண்டனை பெற்றார். இவரது ஊடகவியாளர் சங்கம் இந்த தண்டனையை செலுத்தியதால், இவர் விடுதலை செய்யபப்ட்டார். எனினும் இவர் இப்படி விடுதலை செய்யப்பட்டதை விரும்பவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுப்னா_அல்-ஹுசைன்&oldid=2218823" இருந்து மீள்விக்கப்பட்டது