லுத்லேமைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுத்லேமைட்டு
Ludlamite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Fe,Mn,Mg)3(PO4)2•4H2O
இனங்காணல்
நிறம்ஆப்பிள் பச்சை முதல் அடர் பச்சை
படிக இயல்புஅட்டவனை படிகங்கள்; பெருத்த, மணிகள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்பு{001} இல் சரியானா பிளவு, {100} இல் தெளிவில்லை
மோவின் அளவுகோல் வலிமை3.5
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு, பிளவில் முத்து போல
கீற்றுவண்ணம்வெளிர் பச்சை வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
ஒப்படர்த்தி3.12–3.19
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.650 - 1.653 nβ = 1.669 - 1.675 nγ = 1.688 - 1.697
இரட்டை ஒளிவிலகல்δ = 0.038 - 0.044
2V கோணம்அளக்கப்பட்டது: 82°
மேற்கோள்கள்[1][2][3]

லுத்லேமைட்டு (Ludlamite) என்பது (Fe,Mn,Mg)3(PO4)2•4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒர் அரிய பாசுப்பேட்டுக் கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.

1877 ஆம் ஆண்டு முதன்முதலில் இங்கிலாந்து நாட்டிலுள்ள கார்ன்வால் மாவட்டத்தில் இருக்கும் வீல்யேன் சுரங்கத்தில் லுத்லேமைட்டு கண்டறியப்பட்டது. 1824 -1880 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த இங்கிலாந்து நாட்டின் கனிமவியலாளர் என்றி லுத்லேம் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

கருங்கற் தீப்பாறைகளிலும், முந்தைய பாசுப்பேட்டு கொண்டுள்ள கனிமங்கள் குறைக்கும் வினைச்சூழலில் ஒடுக்கமடைந்து ஒரு நீர்வெப்ப மாற்ற உற்பத்திப் பொருளாகவும் இக்கனிமம் தோன்றுகிறது[3]. விட்லாக்கைட்டு, விவியானைட்டு, டிரிப்லாய்டைட்டு, டிரிப்லைட்டு, டிரிப்பைலைட்டு, சிடரைட்டு, ஆசுபோபெரைட்டு, பேர்பீல்டைட்டு மற்றும் அபடைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து லுத்லேமைட்டு கிடைக்கிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுத்லேமைட்டு&oldid=2946368" இலிருந்து மீள்விக்கப்பட்டது