உள்ளடக்கத்துக்குச் செல்

லுங்ஷர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூங்சர்

லூங்சர் (Tsipön Lungshar, 1880–1938) என்பவர் ஒரு திபெத்திய அரசியல்வாதி, இசைக்கலைஞர், மெய்யியலாளர், கவிஞர் மற்றும் மருத்துவர் ஆவார். 13-வது தலாய் லாமாவின் மரணத்தைத் தொடர்ந்து ஒரு கம்யூனிச சதித்திட்டத்தைத் திட்டமிட்டதன் மூலம், 1930களில் திபெத்திய அரசாங்கத்தின் முக்கிய நபராக மாற முயன்றதாக பழமைவாத அரசியல் எதிரிகளால் இவர் குற்றம் சாட்டப்பட்டார்.

13-வது தலாய் லாமாவால் இரண்டு தசாப்தங்களாகப் பயிற்றுவிக்கப்பட்ட அவரது 'மூன்று உதவியாளர்களில்' ஒருவராக விளங்கியவர் லூங்சர். தலாய்லாமாவின் திபெத்திய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தார். மற்றைய இரண்டு உதவியாளர்கள் சரோங், குன்பெல்லா, இருவரும் வேளாண்மைக்குப் பொறுப்பாக இருந்தனர். இவர்கள் மூவரும் விதிவிலக்காக திறமையானவர்களாக இருந்தனர் என்றும் கூறப்பட்டது.[1]

சரோங், மற்றும் குன்பெல்லாவைப் போலவே, அவர்களின் பாதுகாவலரான 13-வது தலாய்லாமா இறந்தவுடனேயே, அனைத்து நவீனமயமாக்கலையும் சீர்திருத்தத்தையும் எதிர்த்த தீவிரப் பழமைவாதி லாசா மேல்குடிகளுக்கு லுங்சரும் ஓர் இலக்காக மாறினார்: லூங்சர் ஒரு சதித்திட்டத்தை திட்டமிட்டு ஒரு கம்யூனிச அமைப்பை நிறுவ முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.[2] தலாய்லாமாவின் ஏனைய நெருங்கிய உதவியாளர்களை விட பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட லூங்சர் சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் அவர் பிற்காலத்தில் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் மேற்கொள்ளாதிருக்க அவரது இரண்டு கண்களும் பிடுங்கப்பட்டன.[1][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Mullin 2001, pp. 271–2
  2. Thondup, Thurston (2015) pg. 60
  3. Thondup, Thurston (2015) pg. 61

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லூங்சர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுங்ஷர்&oldid=3169981" இலிருந்து மீள்விக்கப்பட்டது