லீ ஜூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீ ஜூன்
雷军 Lei Jun.jpg
பிறப்பு16 திசம்பர் 1969 (அகவை 53)
படித்த இடங்கள்
  • Wuhan University
பணிஅரசியல்வாதி
இணையத்தளம்http://leijun.blog.techweb.com.cn/

லீ ஜூன் (Lei Jun 16 திசம்பர் 1969) என்பவர் சீனா வைச் சேர்ந்த பெரும் தொழில் அதிபர் ஆவார்.[1] சியோமி என்னும் பெரிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கி அப் பெரிய குழுமத்தின் தலைவராகவும் செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.

தொழில் அதிபராக[தொகு]

1992 ஆம் ஆண்டில் லீ ஜூன் கிங் சாப்ட் நிறுவனத்தை கூட்டாளிகளுடன் தொடங்கி அதன் பின்னர் 1998இல் அதன் தலைவராகவும் ஆனார். 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பல தொழில் நிறுவனங்களை உருவாக்கினார். 2010 ஆம் ஆண்டு எப்பிரலில் சியோமி குழுமத்தைத் தொடங்கினார்.

சிறப்புகள்[தொகு]

போர்ப்ஸ் இதழ் இவரை 2014 ஆம் ஆண்டுக்குரிய சிறந்த வணிகர் என்றும் 2015 ஆம் ஆண்டில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 87 ஆவது இடத்தில் இவரை வைத்தும் இவரது சொத்தின் நிகர மதிப்பு 13.2 பில்லியன் டாலர்கள் என்றும் மதிப்பீடு செய்தது. 2016 இல் இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 9.8 பில்லியன் டாலர் என போர்ப்ஸ் இதழ் மதிப்பீடு செய்தது.[2]

மேற்கோள்[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/business/india-business/we-expect-to-grow-over-100-in-india-this-yr-xiaomi-ceo/articleshow/57865488.cms
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-03-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_ஜூன்&oldid=3570267" இருந்து மீள்விக்கப்பட்டது