லியோபோல்டோ கிரெல்லி (பேராயர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராயர்
லியோபோல்டோ கிரெல்லி
Leopoldo Girelli
  • இந்தியாவுக்கான திருத்தந்தையின் தூதர்
  • நேபாளத்துக்கான திருத்தந்தையின் தூதர்
நியமனம்
  • 13 மார்ச் 2021 (இந்தியா)
  • 13 செப்டம்பர் 2021 (நேபாளம்)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு17 சூன் 1978
கியூலியோ ஒகியோனி-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு17 சூன் 2006
அஞ்செலோ சொடானோ-ஆல்
பிற தகவல்கள்
பிறப்பு13 மார்ச்சு 1953 (1953-03-13) (அகவை 71)
பிரிதோர், இத்தாலி
குடியுரிமைஇத்தாலியர்
வகித்த பதவிகள்
  • சிங்கப்பூருக்கான திருத்தந்தையின் தூதர்
  • இந்தோனேசியாக்கான திருத்தந்தையின் தூதர்
  • கிழக்குத் திமோருக்கான திருத்தந்தையின் தூதர்
  • மலேசியாவுக்கான திருத்தந்தையின் தூதர்
  • புருணைக்கான திருத்தந்தையின் தூதர்
  • வியட்நாமுக்கான திருத்தந்தையின் தூதர்
  • இசுரவேலுக்கான திருத்தந்தையின் தூதர்
படித்த இடம்இறையியல் சமயக் கலாசாலை

லியோபோல்டோ கிரெல்லி (Leopoldo Girelli) (பிறப்பு: 13 மார்ச் 1953) இத்தாலி நாட்டின் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த பேராயார் ஆவார். இவர் தற்போது இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளில் வாத்திகான் நாட்டின் போப்பாண்டவரின் அப்போஸ்தல தூதராக 13 மார்ச் 2021 மற்றும் 13 செப்டம்பர் 2021 முதல் செயல்படுகிறார். முன்னர் இவர் போபாண்டவரின் தூதராக சிங்கப்பூர், இந்தோனேசியா, கிழக்கு திமோர், மலேசியா, புருணை, வியட்நாட், இஸ்ரேல், ஜெருசலம், பாலஸ்தீனம் மற்றும் சைப்பிரஸ் நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

இந்திய கத்தோலிக்க குருமார்களுக்கு கோரிக்கை[தொகு]

இந்தியாவிற்கான அப்போஸ்தல தூதுவர் என்ற முறையில் இவர், 29 அக்டோபர் 2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் செயல்படும் கத்தோலிக்க மதகுருமார்கள் சுதந்திரமான அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பதவிகளை வகிப்பதில் இருந்து விலகி இருக்க கேட்டுக்கொண்டார்.[1][2] [3]மேலும் தமிழ்நாடு ஆயர்கள் பேரரவை, மறைமாவட்ட நிர்வாகிகளின் அனுமதியின்றி கத்தோலிக்க மதகுருமார்கள் தனித்த அறக்கட்டளைகள் அல்லது சங்கங்களுடன் தொடர்புபடுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறித்தியுள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Close clergy’s personal trusts, Pope’s envoy instructs Tamil Nadu Bishops
  2. "Vatican orders priests to close private trusts". Archived from the original on 2021-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
  3. Keep priests from being financial power bases, nuncio warns Indian bishops
  4. Snap NGO ties: Catholic church to Tamil Nadu clergy

வெளி இணைப்புகள்[தொகு]