உள்ளடக்கத்துக்குச் செல்

லியோனார்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


லியோனார்ட்டைட்டு (Leonardite) என்பது மென்மையான மெழுகுத்தன்மை கொண்ட கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் பளபளப்பாக கண்ணாடி போலக் காணப்படும் ஒரு கனிமம் போன்ற ஒரு பொருளாகும். காரக் கரைசல்களில் இது நன்றாகக் கரையும். லிக்னைட்டு கனிமம் ஆக்சிசனேற்றம் அடைவதால், லிக்னைட்டு சுரங்கங்களின் மேற்பரப்புக்கு அருகில் இது உருவாகிறது[1]. இயுமிக் அமிலத்திற்கு லியோனார்ட்டைட்டே முக்கியமான ஆதார மூலமாகும். 90% இயுமிக் அமிலம் இதிலிருந்தே கிடைக்கிறது[2]. மண் வளத்தைப் பெருக்க மண்ணுடன் இவ்வமிலம் கட்டுப்படுத்தியாகச் சேர்க்கப்படுகிறது. நீர் தூய்மைப்படுத்தும் செயல்முறையில் அயனிப் பரிமாற்ற பிசின்களை நிலைநிறுத்தவும் இது பயன்படுகிறது[3]. மாசுபடுத்தப்பட்ட சூழல்களைச் சரிசெய்தல் மற்றும் தோண்டுதல் கூட்டுசேர் பொருளாக பயன்படுதல் போன்றவையும் இதன் பயன்பாடுகளில் அடங்கும்[4]. அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்த்தர் கிரே லியோனார்டு இக்கனிமப் பொருளைக் கண்டுபிடித்த காரணத்தால் இப்பெயர் வைக்கப்பட்டது. வடக்கு தக்கோட்டா நிலவியல் அளவை நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக இவர் பணிபுரிந்தார். லியோனார்ட்டைட்டு படிவுகள் குறித்து அதிக அளவில் ஆய்வுகளையும் மேற்கொண்டார்[5].

உருவாக்கம்[தொகு]

லியோனார்டைட்டு கனிமம் லிக்னைட்டு படிவுகளுக்கு அருகாமையில் அதனுடன் சேர்ந்து காணப்படுகிறது. லியோனார்டைட்டின் வேதியியல் பகுப்பாய்வுகள் தரும் விளக்கம் அதை லிக்னைட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன. லிக்னைட்டு ஆக்சிசனேற்றம் அடைவதால் லியோனார்டைட்டு உருவாவதாகவும் கருதப்படுகிறது[6].

தோற்றம்[தொகு]

லியோனார்ட்டைட்டு முதன் முதலில் வடக்கு தக்கோட்டாவில் கண்டறியப்பட்டது. மற்றும் அம்மாநிலத்தில் இருந்த அனைத்து லிக்னைட்டு படிவுகளுடனும் இது தொடர்புடையதாக இருந்தது[6]. மேலும் உலகம் முழுவதுமுள்ள லிக்னைட்டு அல்லது துணை புகைமிகு நிலக்கரி படிவுகளுக்கு அருகில் காணப்பட்டதாகவும் அறியப்படுகிறது. கனடாவின் ஆல்பெர்ட்டா[4], பல்கேரியாவின் அச்லடா[7] மற்றும் செலி, துருக்கி, ஆத்திரேலியாவின் பச்சசு மார்சு போன்றவை அதற்கு சில உதாரணங்களாகும்[8].

பயன்கள்[தொகு]

மண் கட்டுபடுத்தி[தொகு]

நிலத்து மண்ணில் நேரடியாகச் சேர்த்து பயன்படுத்த அல்லது இயுமிக் அமிலத்தின் மூலமாக செயல்படுவது அல்லது பொட்டாசியம் இயுமேட்டாக மண்ணுக்கு வளம் சேர்ப்பது போன்ற செயல்பாடுகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. கார்பனை மண்ணில் நிலைநிறுத்தவும் பழுப்பு நிலக்கரியை கரிம உரமாகப் பயன்படுத்தவும் ஆராயப்படுகிறது[9].

மாசடைந்த மண்ணை வளமாக்க[தொகு]

லியோனார்டைட்டைக் கலப்பு உரங்களுடன் கலந்து பயன்படுத்தும்போது அது தாவரங்கள் மாசடைந்த நிலத்திலிருந்து உலோகங்களை நேரடியாக எடுத்துக் கொள்வதை குறைக்க உதவுகிறது[10].

துளையிடும் சேர்க்கைப் பொருளாக[தொகு]

புவியில் கிணறுகள் தோண்டி ஐதரோகார்பன் எடுப்பதற்கான துளையிடும் பாய்மங்களாக லியோனார்டைட்டைடு பயன்படுகிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் சில மரங்களை அப்புறப்படுத்த இதைப் பயன்படுத்தினார்கள்[11].

மேற்கோள்கள்[தொகு]

 1. Klaus K. E. Neuendorf; American Geological Institute (2005). Glossary of Geology. Springer Science & Business Media. p. 369. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-922152-76-6.
 2. Tan, K. H. (2003). Humic Matter in Soil and the Environment: Principles and Controversies. CRC Press. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-91254-6.
 3. The mineral industry of North Dakota, USGS report on non-fuel minerals in North Dakota
 4. 4.0 4.1 Hoffman, G.L., Nikols, D.J., Stuhec, S., Wilson, R.A. Evaluation of Leonardite (Humalite) Open File Report 1993-18, Resources of Alberta, Alberta Geological Survey பரணிடப்பட்டது 2009-05-01 at the வந்தவழி இயந்திரம்
 5. Odzoba, D.M., Blyth, J.C., Engler, R.F., Dinel, H. & Schnitzer, M. 2001. Leonardite and humified organic matter. In Ghabbour, E.A. & Davies, G. (eds.) Humic Substances: Structures, Models and Functions (Special Publication), Royal Society of Chemistry 388pp. பரணிடப்பட்டது 2011-06-27 at the வந்தவழி இயந்திரம்
 6. 6.0 6.1 "Youngs, R.W. & Frost, C.M. 1963. Humic acids from leonardite – a soil conditioner and organic fertilizer. Ind. Eng. Chem., 55, 95–99" (PDF). Archived from the original (PDF) on 2010-06-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
 7. Kalaitzidis, S; Papazisimou, S; Giannouli, A; Bouzinos, A; Christanis, K (2003), "Preliminary comparative analyses of two Greek leonardites☆", Fuel, 82 (7): 859–862, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0016-2361(02)00368-X
 8. Victorian Competition & Efficiency Commission, Inquiry into Regulatory Barries to Regional Economic Development, 15 November 2004. Submission 54
 9. Latrobe Fertilisers Holdings Ltd official website
 10. Gore, A.B. 2007. Environmental research at the leading edge, Nova Science Pub Inc., 353pp.
 11. Darley, H.C.H. & Gray, D.R. 1988. Composition and properties of drilling and completion fluids, Gulf Professional Publishing, 644pp.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோனார்டைட்டு&oldid=3570251" இலிருந்து மீள்விக்கப்பட்டது