உள்ளடக்கத்துக்குச் செல்

லிசா ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிசா ரே

இயற் பெயர் லிசா
பிறப்பு ஏப்ரல் 4, 1972 (1972-04-04) (அகவை 53)
டொராண்டோ, ஒன்டாரியோ, கனடா
தொழில் நடிகை, வடிவழகி
நடிப்புக் காலம் 1991–தற்போது
துணைவர்
ஜேசன் தெக்னி (தி. 2012)
பிள்ளைகள் 2
இணையத்தளம் lisaraywrites.com
அமெரிக்காவின் பிறந்த நடிகையும் ஆடை அலங்கார வடிவமைப்பாளரான லிசாரே தொழில் வாழ்க்கைக்காக இப்பெயரில் அறியப்படுகிறார்.

லிசா ராணி ரே ( 4 ஏப்ரல் 1972[1]) என்பவர் ஒரு கனடிய நடிகையாவார். 1990 களின் முற்பகுதியில் இந்தியாவில் தனது வடிவழகி வாழ்க்கையைத் தொடங்கினார், பாம்பே டையிங், லக்மே போன்ற முன்னணி இந்திய வணிகப் பொருட்களுக்காக வடிவழகியாகத் தோன்றினார். 1994 ஆம் ஆண்டு ஹன்ஸ்டெ கெல்டே திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். ரே தன் நடிப்பு வாழ்க்கையில், பிரச்சினை சார்ந்த சித்தரிப்புகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். குறிப்பாக 2005 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கனேடிய திரைப்படமான வாட்டர் மற்றும் விருது பெற்ற தென்னாப்பிரிக்க திரைப்படமான தி வேர்ல்ட் அன்சீன் ஆகியவற்றில் தோன்றினார்.

23 ஜூன் 2009 அன்று அவருக்கு பல்சாற்றுப்புற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குணப்படுத்த முடியாத இரத்த புற்றுநோயாகும்.[2] இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பற்றிய ஒரு வலைப்பதிவை தி யெல்லோ டைரிஸ் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.[3] இவரது எழுத்தும், பத்திகளும் பல முக்கிய வெளியீடுகளில் தொடர்ந்து வெளிவந்தன.[4][5] ரே வேர்-செல் சிகிச்சையின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார்.[6] மேலும் பல வெற்றிகரமான நிதி திரட்டுபவர்களுக்கு ஆதரவாகவும், புற்றுநோய் விழிப்புணர்வு பரப்புரைகளிலும் பங்கேற்றுள்ளார்.

2011 ஆம் ஆண்டில், டிஸ்கவரி தொலைக்காட்சியில் பிரபலமான பயண நிகழ்ச்சியை ரே தொகுத்து வழங்கத் தொடங்கினார்.[7] மேலும் ஃபுட் நெட்வொர்க்கின் மிக உயர்ந்த தரமதிப்பீடு பெற்ற நிகழ்ச்சியான டாப் செஃப் கனடாவில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் தோன்றினார்.[8]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

லிசா ரே கனடாவின் ஆண்டரியோவில் உள்ள டொரோண்டோவில் இந்திய மரபு பெங்காலி தந்தை மற்றும் போலந்து கத்தோலிக்க தாயாருக்கும் பிறந்தார்.[9] மேலும் டொரொண்டோவின் புறநகர் பகுதியான எடோபிகோக்கில் வளர்ந்தார். ஐந்து ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று கல்விரீதியாக புலமை பெற்ற அவர் அவற்றில் நான்கு ஆண்டுகளில், எட்டோபிகோக் கல்வி நிறுவனம், ரிச்வியூ கல்வி நிறுவனம் மற்றும் சில்வர்துரோன் கல்வி நிறுவனம் போன்ற மூன்று வேறுவேறு உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயின்றார்.[10]

லிசா அவரது தாய்வழிப் பாட்டியுடன் பூலிஷில் பேசுவார். மேலும் அவரது திரைப்படங்களில் ஆர்வம் கொண்ட தந்தையுடன் பெடரிகோ பெலினி மற்றும் சத்யஜித் ரே ஆகியோரின் திரைப்படங்களை பார்த்துள்ளார்.[11] அவரது 16 ஆவது வயதில் வடிவழகு செய்யத் தொடங்கி இந்தியாவிற்கு குடும்பத்துடன் விடுமுறைக்கு வந்திருந்த சமயத்தில் கூட்டத்தில் ரே ஒரு முகவரால் இனம் கண்டுகொள்ளப்பட்டார்.[11]

தொழில் வாழ்க்கை

[தொகு]

ரேயின் வடிவழகி வாழ்க்கை அவரது பதின்ம வயதிலேயே தொடங்கியது. பாம்பே டையிங்குக்கான ஒரு விளம்பரத்தில், இவர் கரண் கபூருடன் கருப்பு நிற நீச்சலுடையில் தோன்றினார்.[12][13][14][15] இந்திய பேஷன் பத்திரிக்கையான கிளாட்ராக்ஸ் இதழின் ஆசிரியரான மௌரீன் வாடியா உடனான ஒரு சந்திப்பின் விளைவாக, இதழில் இடம்பெற்ற நீச்சலுடை அணிந்த இவரது அட்டைப்படமானது ரேயை இந்தியாவில் தேசிய அளவில் புகழ் பெறச் செய்தது. "எனது மிகவும் நிறைவான தொழில்முறை தருணங்களில் பெரும்பாலானவை தற்செயலாக எனக்கு வந்தன", என்று ரே பின்னர் எழுதினார்.[16]

பின்னர் பத்திரிக்கை தொழில் பயில்வதற்கு டொராண்டோவில் பல்கலைக்கழகத்தைத்தில் சேர்வதற்காகத் தயாராக இருந்தார். ஆனால் ஒரு மகிழுந்து விபத்தில் அவரது தாயார் காயமடைந்தது வாழ்நாள் முழுக்க சக்கர நாற்காலியில் காலம் தள்ளவேண்டிய நிலைக்கு ஆளானதால் அந்தத் திட்டங்கள் அனைத்தையும் இவர் ஒதுக்கினார்.[17][18] ரே இந்தியாவுக்குத் திரும்பி, நாட்டின் முதல் உச்ச வடிவழகிகளில் ஒருவராகவும், லக்மே, பாம்பே டையிங் ஆகியவற்றின் முகமாகவும் மாறினார்.[19]

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான வடிழகியாக, ரே லோரியல், மாஸ்டர்கார்டு, தே பீர்ஸ், ராடோ போன்ற உலகளாவிய வணிகப் பொருட்களுக்கு சின்னமாக ஆனார்.[20] டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வாக்கெடுப்பில் "புத்தாயிரத்தில் ஒன்பதாவது மிகவும் அழகிய பெண்" என லிசாவின் பெயர் இடம்பெற்றது. அதில் சிறந்த பத்தில் இடம்பெற்ற ஒரே வடிவழகி இவர் மட்டுமே ஆவார்.[10] இவர் ஸ்டார் மூவீசின் ஸ்டார் பிஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இணைந்து தொகுத்து வழங்கினார்.[21] மேலும் ஜாவேத் அக்தரால் எழுதப்பட்ட கஜல் அஃப்ரீன் அஃப்ரீனுக்கான இசைக் காணொளியில் தோன்றினார். அதற்கு நுசுரத் பதே அலி கான் இசையமைத்தார்.

2001–2009

அவரது முதல் திரைப்படத் தொடக்கமாக 1994 ஆம் ஆண்டு நேதாஜி எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக சிறிய பாத்திரத்தில் லிசாரே தோன்றினார். இது கவனிக்கப்படாமல் போனது. பல பாத்திரங்களை நிராகரித்த பிறகு,[22] ரே 2001 இல் இந்தித் திரைப்படத் துறையில் அறிமுகமானார், 2001 ஆம் ஆண்டு கசூர் எனும் திரைப்படத்தில் அப்தப் சிவதசனிக்கு[12] ஜோடியாக நடித்தார். லிசாவால் இந்தி பேச முடியாததால் அவரது குரலுக்குப் பதிலாக திவ்யா தத்தா பின்னணி குரல் கொடுத்தார்.[23] இருந்தபோதிலும், இவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பு தீபா மேத்தாவின் கவனத்தை ஈர்த்தது. 2002 ஆம் ஆண்டு காதல் இந்திய-கனடிய திரைப்படமான பாலிவுட்/ஹாலிவுட் படத்தில் ரேவை அவர் நடிக்கவைத்தார்.[11]

நடிப்பு வாழ்க்கை மிகவும் தீவிரமாகத் தொடரப் போகிறது என்பதை உணர்ந்த ரே, நாடகக் கலையில் கவனம் செலுத்த லண்டனுக்குச் சென்றார். அங்கு இருந்தபோது, ரே சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஸ்பீச் அண்ட் டிராமா, லண்டன் சென்டர் ஃபார் தியேட்டர் ஸ்டடீஸ், டெஸ்மண்ட் ஜோன்ஸ் ஸ்கூல் ஆஃப் பிசிகல் தியேட்டர், பாடா ஆகியவற்றில் பயின்றார். அவர் 2004 ஆம் ஆண்டில், அகாடமி ஆஃப் லைவ் அண்ட் ரெக்கார்டு ஆர்ட்சில் (ALRA) நடிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.[24] தான் படிக்கும் காலத்தில், பட்டம் பெறும் வரை எந்த திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்காமல் இருக்க முயன்றார். இருப்பினும், அகாடமி ஆஃப் லைவ் அண்ட் ரெக்கார்டு ஆர்ட்சில் பயின்று கொண்டிருந்தபோது, தீபா மேத்தாவிடமிருந்து இவருக்கு நடிப்புக்கான மற்றொரு அழைப்பு வந்தது. அது 2005 ஆம் ஆண்டு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமான வாட்டர் ஆகும். அதில் மேத்தாவுடன் லிசா மீண்டும் பணிபுரிந்தார். சர்சைக்குரிய ஒரு படமாக மாறிய வாட்டரில் கல்யாணி என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[25] அதில் அவரது சொந்தக் குரலில் இந்தி பேசியிருந்தாலும் திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் இவரது குரலுக்கு வேரொருவரின் பின்னணி குல்ல் சேர்க்கபட்டது.[23] 2005 ஆம் ஆண்டில் வெளியான வாட்டர் திரைப்படம் தேசிய, உலக அளவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. ரோஜர் ஈபர்ட் இதை " சத்யஜித் ரேயியின் படங்களைப் போல அழகாக இருக்கிறது" என்று விவரித்தார்.[26]

அதன் பின்னர் ரே கனடா, ஐரோப்பா, அமெரிக்கத் தயாரிப்பு படங்களில் பணியாற்றினார். ஆல் ஹேட் டில் பண்ணைப் பெண்ணாக நடித்தது. எ ஸ்டோன்'ஸ் த்ரோ வில் பள்ளி ஆசிரியை மற்றும் த வேர்ல்ட் அன்சீனில் 50-களின் தென் ஆப்பிரிக்க ஒதுக்கப்பட்ட இனத்தில் வீட்டில் இருக்கும் பெண். 2008 இல், சமிம் சரிப்பால் இயக்கப்பட்டு பிரித்தானிய காதல் நகைச்சுவைப் படமான "ஐ காண்'ட் திங்க் ஸ்ட்ரைட்"டில் ஒரு கிறிஸ்துவ-அரப் ஓரினச் சேர்கையாளராக நடித்தார். இது டல்லாஸ் அவுட் டேக்ஸ், மியாமி கே மற்றும் லெஸ்பியன் திரைப்பட விழா, வினோதமான திரைப்பட விழாக்களில் , மற்றும் தம்பா சர்வதேச கே மற்றும் லெஸ்பியன் திரைப்பட விழா உட்பட உலகளவில் நடந்த திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றது.

பட்டப்படிப்புக்குப் பிறகு, ரே 2004 முதல் 2008 வரை மிலன், பாரிஸ், நியூயார்க் போன்ற இடங்களில் வாழ்ந்தார். 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது தாயாரின் இறப்பிற்குப் பிறகு டொராண்டோவுக்குத் திரும்பினார்.[24] 2007 ஆம் ஆண்டில், கில் கில் ஃபாஸ்டர் ஃபாஸ்டரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அதை ரே முடித்தார். இது ஜோயல் ரோஸின் அதே பெயரிலான விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட புதினத்தால் ஈர்க்கபட்டு நாயரால் எடுக்கபட்ட சமகாலத் திரைப்படம் ஆகும். இவர் 2009 ஆம் ஆண்டு யுஎஸ்ஏ நெட்வொர்க் தொடரான சைக்கின் ஒரு பாகத்தில் விருந்தினராக நடித்தார்,  மேலும் வுடி ஹாரல்சன் நடித்த கனடிய-அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படமான டிஃபென்டரில் தோன்றினார். மேலும் 2009 இல், இவர் தீபா மற்றும் திலீப் மேத்தா நகைச்சுவைத் திரைப்படமான குக்கிங் வித் ஸ்டெல்லாவில் நடித்தார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

23 ஜூன் 2009 அன்று, இவருக்கு பல்சாற்றுப்புற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நோயெதிர் பொருட்களை உற்பத்திசெய்யும் ஃபிளாஸ்மா செல்களாக அறியப்படும் வெள்ளை இரத்த செல்களில் வரும் புற்றுநோயாகும். இது மிகவும் அரிய நோயாகும். [27][28] 2010 ஏப்ரலில், தனது சொந்த வேர் செல்களைப் பயன்படுத்தி தன்னியக்க வேர் செல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இவர் புற்றுநோயிலிருந்து விடுபட்டதாக அறிவித்தார்.[29][30] பல்சாற்றுப்புற்று குணப்படுத்த முடியாத நோயாக இருப்பதால், ரே நோயிலிருந்து முழுமையாக குணமடையவில்லை.[31]

2012 பிப்ரவரியில், மேலாண்மை ஆலோசகர் ஜேசன் டெஹ்னியுடன் ரே தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தார்.[32] 20 அக்டோபர் 2012 அன்று, ரே மற்றும் டெஹ்னி (அப்போது வங்கி அதிகாரி) கலிபோர்னியாவின் நாபா பள்ளத்தாக்கில் திருமணம் செய்து கொண்டனர்.[33]

2018 ஜூன்ல், வாடகைத் தாய் மூலம் இரட்டை பெண் பிள்ளைகளுக்கு இவரும் அவரது கணவரும் பெற்றோரானதாக ரே 2018 செப்டம்பரில், அறிவித்தார்.[34]

விருதுகள்

[தொகு]
  • 2002 ஆம் ஆண்டு நடந்த டொரோண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் வருங்கால நட்சத்திரமாக வாக்களிக்கப்பட்டார்.[35]
  • டைம்ஸ் ஆப் இந்தியா வால் புத்தாயிரத்தின் சிறந்த பத்து உயர்ந்த அழகிய இந்தியப் பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • வான்கோவர் விமர்சகர்கள் வட்டத்தால் வாட்டர் என்ற கனடிய திரைப்படத்திற்காக சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் (குறிப்பு: imdb.com, குளோவ் பத்திரிகை, டிசம்பர் 2007).

திரைப்பட விவரங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1994 ஹன்ஸ்டெ கெல்டெ ரேகா சிறப்புத் தோற்றம்[36]
1996 நேதாஜி பிரியா தமிழ்
2001 யுவராஜா லவ்லி கன்னட மொழித் திரைப்படம்
கஷோர் சிம்ரன் பார்கவ்
2002 சோரோன் கா சோர்
தக்கரி தொங்கா புவனா தெலுங்கு மொழித் திரைப்படம்
பாலிவுட்/ஹாலிவுட் சூ (சுனிதா) சிங்
2004 பால் & செயின் செய்மா
2005 வாட்டர் கல்யாணி
சீக்கிங் ஃபியர் நைனா அட்வல்
2006 த ஃப்ளவர்மேன் லூயிஸ் குறும்படம்
குவார்டர் லைஃப் கிரிஸிஸ் ஏஞ்சல்
எ ஸ்டோன்'ஸ் த்ரோ லியா
2007 ஆல் ஹேட் எட்டா பார்
ஐ கான்'ட் திங்க் ஸ்ட்ரைய்ட் தலா
2008 கில் கில் பாஸ்டர் பாஸ்டர் பிளேயர்
த வேர்ல்ட் அன்சீன் மிரியம்
டொரோண்டோ ஸ்டோரீஸ் பெத்
2009 டிஃபெண்டர் டாம்னிக் பால்
குக்கிங் வித் ஸ்டெல்லா மாயா சோப்ரா
சோம்னோலென்ஸ்
2010 லெட் த கேம் பிகின் ஈவா
டிராடெர் கேம்ஸ் சாரா
2011 பேட்ச் டவுன் பெத்தானி ஃபிராங்க்ஸ் குறும்படம்
2016 இஷ்க் பாரெவர் நைனா
வீரப்பன் சிரேயா
2017 தோபாரா: சீ யுவர் ஈவில் லிசா மெர்ச்செணெட்
2019 99 சாங்ஸ் ஷீலா

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு பெயர் பாத்திரம் குறிப்புகள்
2007 பிளட் டைஸ் எலினா "ஸ்டோன் கோல்ட்"
2008 த சம்மிட் ரெபேகா டவுனி
2009 சைக் சீதா "Bollywood Homicide" S04E06
2011 முர்டா மிஸ்ட்ரிஸ் மிரேலா "தி பிளாக் ஹேண்ட்"
எண்ட்கேம் ரோஸ்மேரி வென்டூரி வழக்கமான பாத்திரம்
2012–2014 டாப் செப் கனடா தொகுப்பாளர் Seasons 2–4
2019–2022 போர் மோர் ஷாட்ஸ் பிளீஸ்! சம்ரா கபூர் Season 1–3

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lisa Ray finds strength in blogging about cancer". CTV News. 2009-09-14. Archived from the original on 2009-12-21. Retrieved 2009-11-15. The 37-year-old...
  2. "A global actress reveals her private fight: An incurable cancer, a determined spirit" இம் மூலத்தில் இருந்து 17 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161117225414/http://www.theglobeandmail.com/arts/awards-and-festivals/tiff/a-global-actress-reveals-her-private-fight-an-incurable-cancer-a-determined-spirit/article1379697/. 
  3. "The Yellow Diaries". Lisa Ray (in ஆங்கிலம்). Archived from the original on 7 November 2019. Retrieved 2019-11-07.
  4. Ray, Lisa (2015-01-30). "Whose water is it anyway, writes Lisa Ray". DNA India (in ஆங்கிலம்). Archived from the original on 7 November 2019. Retrieved 2019-11-07.
  5. "Ray of Hope". Vogue India (in Indian English). Archived from the original on 11 April 2019. Retrieved 2019-11-07.
  6. "Lisa Ray emerges 'enriched' from battle with cancer" இம் மூலத்தில் இருந்து 21 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130321095725/http://www.theglobeandmail.com/life/health-and-fitness/health/conditions/lisa-ray-emerges-enriched-from-battle-with-cancer/article572623/. 
  7. Bureau, Adgully. adgully.com (in அமெரிக்க ஆங்கிலம்) https://web.archive.org/web/20191107074219/https://www.adgully.com/lisa-ray-to-show-her-quest-for-gold-tlc-launches-oh-my-gold-47079.html. Archived from the original on 7 November 2019. Retrieved 2019-11-07. {{cite web}}: |last= has generic name (help); Missing or empty |title= (help)
  8. "Television: Top Chef Canada's New Host". Shaw Media Inc. Archived from the original on 31 July 2012. Retrieved 15 November 2011.
  9. "Lisa Ray on Twitter". Archived from the original on 6 February 2017. Retrieved 30 January 2017.
  10. 10.0 10.1 Liam Lacey (2002-09-12). "Just a pinch of spice". The Globe & Mail. Archived from the original on 2002-09-21. Retrieved 2008-11-18.
  11. 11.0 11.1 11.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Chatelaine என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. 12.0 12.1 Anand Sankar (2005-07-30). "A ray of hope for her". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 4 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604233519/http://www.hindu.com/mp/2005/07/30/stories/2005073002440300.htm. 
  13. Veenu Singh (23 November 2015). "We are put here to live and love fiercely, says Lisa Ray". Hindustan Times. Archived from the original on 19 March 2016. Retrieved 17 April 2016.
  14. Ashwini Deshmukh (28 March 2009). "Lisa Ray 'bares it all'". The Times of India. Archived from the original on 12 October 2020. Retrieved 17 April 2016.
  15. Sujata Assomull (14 November 1998). "My Den – Lisa Ray". Indian Express Newspapers. Archived from the original on 13 August 2009. Retrieved 18 November 2008.
  16. Gulab, Rupa (2019-06-30). "Lid off Bollywood secrets, gritty cancer battle in Lisa's story". Deccan Chronicle (in ஆங்கிலம்). Archived from the original on 11 December 2019. Retrieved 2019-12-11.
  17. "More Beautiful for Having Been Broken: Lisa Ray's journey through tragedy and fame". thenewsminute.com. 17 December 2016. Archived from the original on 11 December 2019. Retrieved 2019-12-11.
  18. "Lisa Ray: My mom lost the ability to walk in a car accident. We had switched seats" (in en). India Today. Ist இம் மூலத்தில் இருந்து 11 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191211194215/https://www.indiatoday.in/movies/celebrities/story/lisa-ray-my-mom-lost-the-ability-to-walk-in-a-car-accident-we-had-switched-seats-1615329-2019-11-03. 
  19. Assomull, Sujata. "My life is a split screen: Lisa Ray". Khaleej Times (in ஆங்கிலம்). Archived from the original on 11 December 2019. Retrieved 2019-12-11.
  20. "How a Bollywood actress found strength while battling blood cancer". South China Morning Post (in ஆங்கிலம்). 2019-01-27. Archived from the original on 11 December 2019. Retrieved 2019-12-11.
  21. "'I Can't Think Straight' Star Lisa Ray to Host 'Top Chef Canada'". pride.com (in ஆங்கிலம்). 2012-02-08. Archived from the original on 11 December 2019. Retrieved 2019-12-11.
  22. Liz Braun (2008-11-07). "Lisa Ray shines in the spotlight". Toronto Sun. Retrieved 2008-11-18.
  23. 23.0 23.1 P. Karthik (2008-02-20). "I'm loving it: Lisa Ray". Times of India. Retrieved 2008-11-18.
  24. 24.0 24.1 "Lisa Ray". Archived from the original on 7 April 2015. Retrieved 20 December 2016.
  25. Correspondent, Our Special (2000-02-07). "'Water' shooting stopped again, Mehta 'asked to leave Varanasi'" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 11 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191211194243/https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/water-shooting-stopped-again-mehta-asked-to-leave-varanasi/article28000468.ece. 
  26. Ebert, Roger. "Water movie review & film summary (2006) | Roger Ebert". rogerebert.com (in ஆங்கிலம்). Archived from the original on 11 December 2019. Retrieved 2019-12-11.
  27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-16. Retrieved 2010-01-18.
  28. http://timesofindia.indiatimes.com/India_Buzz/Im_loving_it_Lisa_Ray/articleshow/2795774.cms
  29. Jill Sarjent (22 April 2010). "Actress Lisa Ray says she's cancer free". Toronto Star இம் மூலத்தில் இருந்து 25 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100425041144/http://www.thestar.com/entertainment/movies/article/799144--actress-lisa-ray-says-she-s-cancer-free. 
  30. Ray, Lisa (2015-03-27). "My message in a bottle, writes Lisa Ray". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2020-11-21.
  31. Kathakali Banerjee (16 June 2013). "My hubby's my secret weapon: Lisa Ray". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 20 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130620005517/http://articles.timesofindia.indiatimes.com/2013-06-16/news-interviews/40006320_1_cancer-patients-jason-dehni-lisa-ray. 
  32. IANS (1 February 2012). "Actress Lisa Ray got engaged to banker Jason Dehni". Ibnlive. Archived from the original on 22 June 2012. Retrieved 1 February 2012.
  33. "Lisa Ray to marry lover Jason Dehni in October". 3 June 2012. Archived from the original on 10 November 2013.
  34. "Lisa Ray And Husband Jason Dehni Welcomes Twin Daughters Sufi and Soleil Via Surrogacy". Headlines Today இம் மூலத்தில் இருந்து 18 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180918200537/https://headlinestoday.org/entertainment/2926/lisa-ray-and-husband-jason-dehni-welcomes-twin-daughters-sufi-and-soleil-via-surrogacy/. 
  35. Constance Droganes (2007-09-10). "Canadian actress Lisa Ray goes a little bit country in 'All Hat'". CTV News. Archived from the original on 2009-03-18. Retrieved 2008-11-18.
  36. "Too tempting". இந்தியா டுடே. New Delhi: Living Media. 30 June 1994. Archived from the original on 24 November 2021. Retrieved 13 March 2024.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசா_ரே&oldid=4188607" இலிருந்து மீள்விக்கப்பட்டது