லாயூரியோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாயூரியோனைட்டு
Laurionite
கிரீசு நாட்டின் லாயூரியம் மாவட்டத்தில் பாறைக்குழியொன்றில் கிடைத்த லாயூரியோனைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுPbCl(OH)
இனங்காணல்
நிறம்நிறமற்றும் வெண்மையும்
படிக இயல்புநீட்டிய பட்டகத்தன்மை படிகங்கள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்பு{101} இல் தனித்துவம்
விகுவுத் தன்மைநெகிழும்
மோவின் அளவுகோல் வலிமை3 - 3.5
மிளிர்வுவிடாப்பிடியான முத்து பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி6.241
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 2.077 nβ = 2.116 nγ = 2.158
இரட்டை ஒளிவிலகல்δ = 0.081
2V கோணம்அளக்கப்பட்டது: 70°
கரைதிறன்சிறிதளவு கரையும்
மேற்கோள்கள்[1][2][3][4]

லாயூரியோனைட்டு (Laurionite) என்பது PbCl(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் ஈய ஆலைடு கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். நிறமற்றதாகவும் வெண்மைநிறத்திலும் செஞ்சாய்சதுரப் படிகங்களாக இக்கனிமம் உருவாகிறது. பாரா லாயூரியோனைட்டுடன் சேர்ந்து லாயூரியோனைட்டு இருபடிக உருவத்திலும் காணப்படுகிறது. இவ்விரண்டுமே மேட்லாக்கைட்டு கனிமக் குழுவின் உறுப்புனர்களாக உள்ளன[1].

1887 ஆம் ஆண்டு கிரீசு நாட்டின் அட்டிகா பிரதேசத்திலுள்ள லாயூரியம் மாவட்டத்தில் முதன்முதலில் லாயூரியோனைட்டு கண்டறியப்பட்டது. லாயூரியம் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட்தால் கனிமம் இப்பெயரைப் பெற்றது. ஈய தாதுவின் படிவுகளில் ஆக்சிசனேற்ற விளைபொருளாகவும், ஈயத்தைப் பகுதிப்பொருளாகப் பெற்றுள்ள கசடுகள் உப்புநீர் கரைசல்களுடன் வினைபடுவதாலும் லாயூரியோனைட்டு உருவாகிறது பென்போல்டைட்டு, பீல்டுலெரைட்டு பாசுகீனைட்டு, செருசைட்டு, ஆங்கிளசைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்த நிலையில் . பெரும்பாலும் லாயூரியோனைட்டு இயற்கையில் தோன்றுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாயூரியோனைட்டு&oldid=2735883" இலிருந்து மீள்விக்கப்பட்டது