லாத்விய கணிதவியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாத்விய கணிதவியல் சங்கம் (Latvian Mathematical Society) என்பது லாத்வியாவிலுள்ள கற்றறிந்த கணிதவியலாளர்களின் சமூகமாகும். இச்சங்கம் பன்னாட்டு கணித சங்கத்தால் லாத்வியா நாட்டிற்கான ஒரு தேசிய கணித அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] லாத்வியாவில் கணித செயல்பாட்டைத் தூண்டுவது மட்டுமின்றி, முந்தைய சாதனைகளை ஒருங்கிணைத்து, பன்னாட்டு அளவில் லாத்விய கணிதவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பையும் இச்சங்கம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.[2] லாத்விய கணிதவியல் சங்கம் 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3][4]

லாத்வியா நாட்டிலுள்ள ரிகா நகரத்தின் லாத்வியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரேச்சு ரெய்ன்ஃபெல்ட்சு தற்போது இச்சங்கத்தின் தலைவராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Latvia பரணிடப்பட்டது 2017-10-10 at the வந்தவழி இயந்திரம், International Mathematical Union, retrieved 2015-01-24.
  2. "Alphabetical List of Mathematical Societies". st-andrews.ac.uk.
  3. "The Latvian Mathematical Society". University of St Andrews. August 2004. பார்க்கப்பட்ட நாள் January 24, 2015.
  4. Šostak, Alexander (June 2003), "Latvian Mathematical Society after 10 years" (PDF), European Mathematical Society Newsletter: 21–25.

புற இணைப்புகள்[தொகு]