லஷ்கர்-இ-ஜாங்வி
லஷ்கர்-இ-ஜாங்வி (Lashkar-e-Jhangvi, உருது: لشكرِجهنگوی) பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1996 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பானது சிபா-இ-ஷபா அமைப்பிலிருந்து பிரிந்த ரியாஸ் பஸ்ராவால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இந்த அமைப்பு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.[2] இந்த அமைப்பு தொடர்ந்து ஷியா பிரிவு மக்களையும் அவர்களைப் பாதுகாப்பவர்களையும் அழித்து வந்துள்ளது.[3][4] பாகிஸ்தான் உளவு அமைப்பால் இந்த தீவிரவாதக் குழு ஆபத்தான ஒன்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[5]
உருவான விதம்
[தொகு]ரியாஸ் பஸ்ரா தன்னுடன் அக்ரம் லகோரி மற்றும் மாலிக் ஈஷாக் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு சிபா-இ-ஷபா அமைப்பிலிருந்து பிரிந்து 1996-ல் இந்த அமைப்பை உருவாக்கினார். 2002 ஆம் ஆண்டு மே மாதம் ரியாஸ் பஸ்ரா மரணமடைந்த[6] பின்னர் இந்த அமைப்பின் தலைவராக 'அக்ரம் லகோரி ஆனார்.[7] சிறைச்சாலையிலிருந்த மாலிக் ஈஷாக் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தியதி விடுதலை செய்யப்பட்டபின்னர் இகுழுவின் செயல் தலைவரானார் (operational chief).[8][9][10][11]
தொடர்புகள்
[தொகு]இந்தக் குழுவிற்கு தலிபான், இஸ்லாமிக் மூவ்மெண்ட் ஆஃப் உஸ்பெக்கிஸ்தான், 'சிபா-இ-ஷபா, ஹர்கத்-உல்-முஜாகித்தீன், ஜெய்ஸ்-இ-முகம்மது, அல் காயிதா[1][12][13] மற்றும் ஜூந்தாலா ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு இருந்தது.[14] மேலும் இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தனது செயல்களுக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் அல் காயிதா அமைப்பிடமிருந்து பண உதவியும் பெற்றுள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Roul, Animesh (2 June 2005). "Lashkar-e-Jhangvi: Sectarian Violence in Pakistan and Ties to International Terrorism". Terrorism Monitor (Jamestown Foundation) 3 (11). http://intellibriefs.blogspot.com/2005/06/lashkar-e-jhangvi-sectarian-violence.html. பார்த்த நாள்: 24 September 2013.
- ↑ "Pakistani group joins US terror list". BBC News South Asia. பார்க்கப்பட்ட நாள் 30 January 2003.
- ↑ Ahmad, Tufail (21 March 2012). "Using Twitter, YouTube, Facebook and Other Internet Tools, Pakistani Terrorist Group Lashkar-e-Jhangvi Incites Violence against Shi'ite Muslims and Engenders Antisemitism". The Middle East Media Research Insititue, memri.org. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012.
- ↑ "Pakistani Shi'ites call off protests after Quetta bombing arrests". 19 February 2013 இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927175642/http://www.reuters.com/article/2013/02/19/us-pakistan-quetta-bombing-idUSBRE91I0Q420130219.
- ↑ "Iran condemns terrorist attacks in Pakistan". Tehran Times. 17 February 2013 இம் மூலத்தில் இருந்து 4 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140904022747/http://www.tehrantimes.com/politics/105710-iran-condemns-terrorist-attacks-in-pakistan. பார்த்த நாள்: 18 February 2013.
- ↑ http://www.nytimes.com/2002/05/19/world/for-militant-no-glorified-end-but-death-in-the-dust.html
- ↑ http://www.satp.org/satporgtp/countries/pakistan/terroristoutfits/Lej.htm
- ↑ Mir, Amir (4 October 2011). "Kidnappers of Taseer’s son want release of Qadri". The News International இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927184323/http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=70814&Cat=6. பார்த்த நாள்: 24 September 2013.
- ↑ Mukhtar, Imran (6 October 2011). "LeJ leader’s entry in Islamabad banned". The Nation இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111006125230/http://nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/Regional/Islamabad/06-Oct-2011/LeJ-leaders-entry-in-Islamabad-banned. பார்த்த நாள்: 24 September 2013.
- ↑ "Attack on Lankans: SC moved against Ishaq’s release". The Express Tribune. 11 October 2011. http://tribune.com.pk/story/271434/attack-on-lankans-sc-moved-against-ishaqs-release/. பார்த்த நாள்: 24 September 2013.
- ↑ "Detention of Malik Ishaq, Shah extended for 2 months". The Nation. 26 October 2011. http://nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/Regional/Lahore/26-Oct-2011/Detention-of-Malik-Ishaq-Shah-extended-for-2-months. பார்த்த நாள்: 26 October 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Lashkar-e-Jhangvi". South Asia Terrorism Portal. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
- ↑ "Pakistan and the Taliban". Economist. 7 August 2009. http://www.economist.com/world/asia/displaystory.cfm?story_id=14201152. பார்த்த நாள்: 11 August 2009.
- ↑ 18 Shias Killed in Pak Bus Massacre பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம் PTI | Rezaul H Laskar | Islamabad | 28 February 2012