லதா குரியன் ராஜீவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லதா குரியன் ராஜீவ்
தாய்மொழியில் பெயர்ലത കുര്യൻ രാജീവ്
பிறப்பு17 ஏப்ரல் 1964 (1964-04-17) (அகவை 59)
திருவனந்தபுரம்
பணிதிரைப்பட தயாரிப்பாளர் & கலை வரலாற்றாசிரியர் & கலைக் கண்காணிப்பாளர் மற்றும் கலைக் கல்வியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1982 ஆம் ஆண்டு முதல்
வாழ்க்கைத்
துணை
டி. கே. ராஜீவ் குமார்
பிள்ளைகள்மிருணாள் ராஜீவ் & கீர்த்தனா ராஜீவ்

லதா குரியன் ராஜீவ், இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும், தொழிலதிபருமாவார். பிரபல மலையாள திரைப்பட இயக்குனரான, டி.கே. ராஜீவ் குமாரின் மனைவியுமாவார். இவர், நீல தேவதை பட நிறுவனம்[1][1][2] என்ற நிறுவனத்தின் மூலம் மூன்றுக்கும் மேற்பட்ட  மலையாளத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள கலைக்கூடமான லா கேலரி 360 [2][3] என்பதன் உரிமையாளரான லதா, கலைக் காப்பாளராகவும், விரிவுரையாளராகவும் இருந்து வருகிறார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கலை வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார்.

1999 ஆம் ஆண்டில் வெளியான ஜலமர்மரம் இவரது முதல் திரைப்படத் தாயாரிப்பாகும். இப்படத்தை டி.கே.ராஜீவ் குமார் இயக்கியுள்ளார். இது, கேரளாவின் பழமையான நீர் உயிர்நாடிகளின் மாசுபாட்டைப் புறக்கணிப்பதைப் பற்றி ஒரு குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாகும். இத்திரைப்படம், அந்த ஆண்டிற்கான சுற்றுச்சூழல் பற்றிய சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளது. அத்தோடு, தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்துக்கான சிறந்த தொகுப்பாளர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான இரண்டாம் இடம் ஆகிய கேரள மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளது.

இயக்குனர் குமார் இயக்கிய இவரது இரண்டாவது திரைப்படத் தயாரிப்பான சேஷம், நடிகர் ஜெயராம் நடித்த மனநலம் மற்றும் சமூக உணர்வின்மை பற்றிய கதையை மையமாகக் கொண்டதாகும். இது சிறந்த திரைப்படத்திற்கான கேரள மாநில விருது, ஸ்ரீகர் பிரசாத்துக்கான தொகுப்பாளர், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த கதை மற்றும் முன்னணி நடிகரான ஜெயராமுக்கான சிறப்பு நடுவர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

இவரது மூன்றாவது தயாரிப்பான, கிட்டத்தட்ட முழுக்க முழுக்க அடுக்குமாடி மின்தூக்கியில் நடக்கும் ஒரு விறுவிறுப்பான உளவியல் சம்பந்தப்பட்ட, அப் & டவுன் - முகலில் ஓரழுண்டு என்பதாகும், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஒரு குழும நடிகர்களுடன் இயக்குனர் குமார் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.  

2013 ஆம் ஆண்டில், தீப்தி நாயர் எழுதிய மலையாளக் குறும்படமான கொலோன் என்பதை இயக்கி வெளியிட்டதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த குறும்படம், 'நீல தேவதை பட நிறுவனத்தின்' முதல் குறும்படமாகும். ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் எவ்வாறு மாற்றும் என்ற அனுபவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

மேலும் மலையாளத்தில் முழுநீள திரைப்படமான ஹூ ஆம் ஐ (2012) என்பதை ஒரு பரிசோதனையாக பிரவீன் பி கோபிநாத் திரைக்கதை எழுதி நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார். அன்றாட வாழ்வில் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் தில்லுமுல்லுகளைப் பற்றி பார்வையாளர்களிடம் கடுமையான கேள்விகளைக் கேட்கும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sathyendran, Nita (2 March 2011). "With a personal touch". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/With-a-personal-touch/article14931473.ece. 
  2. 2.0 2.1 "'Age is Just a Number'".
  3. "Metro Plus Thiruvananthapuram / People : Spanish outing". தி இந்து. 2009-01-01. Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
  4. "Kerala Film Chamber". Archived from the original on 2020-05-22. பார்க்கப்பட்ட நாள் 2023-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லதா_குரியன்_ராஜீவ்&oldid=3923472" இலிருந்து மீள்விக்கப்பட்டது