உள்ளடக்கத்துக்குச் செல்

லட்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லட்சியா
வகை ஆளிலா (தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும்) போரிடு விமானம்
உற்பத்தியாளர் இந்துத்தான் வானூர்தி ஆய்வகம் (HAL)
வடிவமைப்பாளர் இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பு (DRDO)(ADE)
முதல் பயணம் 1985
அறிமுகம் 9 November 2000
தற்போதைய நிலை Active
முக்கிய பயன்பாட்டாளர் இந்திய வான்படை
இந்தியக் கடற்படை
இந்தியத் தரைப்படை
உற்பத்தி 23+ (இந்திய படை)
அலகு செலவு 293.75 இலட்சம் (US$3,67,873.60)

லட்சியா என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலா (தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும்) போரிடு விமானமாகும். லட்சியா என்றால் இலக்கு என்று பொருள்.

வரலாறு[தொகு]

 • 1976ல் ஆளிலா (தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும்) போரிடு விமானத்திற்கான தேவை அதிகரித்தது.
 • 1977ல் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்டன. அதன்படி 35 தகுதிகள் (Inter Services Qualitative Requirement (ISQR points)) பட்டியலிடப்பட்டன.
 • 1980ல் அதற்கான செயல்முறை சாத்தியங்கள் (35 தகுதிகள் - feasibility report) உறுதிப்படுத்தப்பட்டது.
 • அதன்படி இந்துத்தான் வானூர்தி ஆய்வகம் (HAL) 2001ல் PTAE-7 தாறைப்பொறியை வடிவமைத்தது.[1]. அதற்கு முன் பல சோதனைகள் தோல்வியில் முடிந்தது.
 • 2002ல் விமானத்தின் பொறி மேம்படுத்தப்பட்டது.
 • 2003ல் இச்சோதனை முழு வெற்றி பெற்றதை 2007ல் பாதுகாப்பமைச்சர் அந்தோனி உறுதிப்படுத்தினார்.[2]

விவரங்கள்[தொகு]

தொழில்நுட்பத் தகவல்கள்(லட்சியா)

 • நீளம் - 2385 மிமீ
 • இறக்கை - அளவு 3மீ
 • உயரம் - (500-5000 மீ)
 • இறக்கை - பரப்பளவு 2.27 மீ2
 • இறக்கை குறியீட்டெண் - NACA64A008
 • பறப்புக்கு அதிகூடிய எடை - 705 கி ()
 • சக்திமூலம் - 1× HAL PTAE-7 turbojet

செயற்திறன்

 • கூடிய வேகம் 70% ஒலிவேகம்
 • வீச்சு 150 கிமீ (93.2 மைல்கள்)
 • Service ceiling 9000 மீ (5000 மீ with towed sub-target)
 • மேலேற்ற வீதம் 25 மீ/நொ ()

மேற்கோள்[தொகு]

 1. "PTAE-7 jet engine trial successful". Archived from the original on 2003-08-24. பார்க்கப்பட்ட நாள் 2011-08-09.
 2. PILOTLESS AIRCRAFT LAKSHYA - PIB Press Release
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சியா&oldid=3570081" இலிருந்து மீள்விக்கப்பட்டது