லக்கி தர்மசேன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லக்கி தர்மசேன
நேர்முக விவரம்
பிறந்த தேதிc.1945
நாடுஇலங்கை

லக்கி தர்மசேன (பிறப்பு 1945) அவர்கள் லக்கி எலகொட எனவும் அறியப்படுகின்றார். இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இறகு பந்தாட்ட வீராங்கனை ஆவார். இவர் முன்னாள் தேசிய இறகுப்பந்தாட்ட சாம்பியன் பட்டம் பெற்றவராவார்.  தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய வீரர்களில் சிறந்த இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீராங்கனையாக இன்றளவும் கருதப்படுகின்றார்[1].

லக்கி தர்மசேன அவர்கள் இறகுப்பந்தாட்ட இலங்கை தேசிய சாம்பியனாக பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆறு தடவைகளும் ,(1964, 1965, 1966, 1967, 1968 மற்றும் 1970) பெண்கள் இரட்டையர் பிரிவில் நான்கு தடவைகளும் ( 1965, 1967, 1968, மற்றும் 1970) வெற்றி அடைந்துள்ளார்.[2][3]

இவர் இறகுப்பந்தாட்ட விளையாட்டில் நிறைவடைந்த பின் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 1988 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை தேசிய இறகுப்பந்தாட்ட குழுவில் பயிற்றுவிப்பாளராக பணி புரிந்தார். 1986 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்குப்பற்றிய இலங்கை தேசிய இறகுப்பந்தாட்டக் குழுவிற்குப் பயிற்றுவித்தார்[4].

2002ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் விளையாட்டுகளில் பங்குப்பற்றி பெண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்டு, தங்கப் பதக்கம் வென்றார். அதே போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஹிடா கிளிறாட்சி என்பவருடன் இணைந்து விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த  தம்மிக்க குணரத்தின என்பவருடன் உடன் இணைந்து விளையாடி வெள்ளிப் பதக்கமும் வென்றார்[5][6]. லக்கி தர்மசேன 1970 ஆம் ஆண்டு முதல் தற்சமயம் வரை தமது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் வசித்து வருகின்றார்.

குறிப்புகள்[தொகு]

  1. http://www.rootsweb.ancestry.com/~lkawgw/luckya.html www.rootsweb.com.ancestry.com. பார்த்த நாள் 2017-11-15
  2. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=10924 www.thesundayleader.lk பார்த்த நாள் 2017-11-15
  3. http://www.thesundayleader.lk/archive/20021103/review.htm www.island.lk பார்த்த நாள் 2017-11-15
  4. http://www.island.lk/2002/10/30/sports05.html www.island.lk பார்த்த நாள் 2017-11-15
  5. http://www.rootsweb.ancestry.com/~lkawgw/luckya.html
  6. http://www.sundaytimes.lk/021027/sports/3.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்கி_தர்மசேன&oldid=2757996" இருந்து மீள்விக்கப்பட்டது